×
 

மீனவருக்கு வந்த பாடிபில்டிங் ஆசை.. ஸ்டிராய்டு எடுத்ததால் விபரீதம்.. சிறுநீர் வெளியேறாமல் தவித்தவர் பலி..!

சென்னை காசிமேட்டில் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக ஜிம் ட்ரெயினர் கூறியபடி ஊக்கமருந்து எடுத்துக் கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் ராம்கி (வயது 35). அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி பானு. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ராம்கி கடந்த 1 ஆண்டாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

தனிமையில் இருந்த ராம்கி, தனது உடலை மெருகேற்ற கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடற்பயிற்சிக்காக திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தனியார் ஜிம்மில் சேர்ந்தார். அங்கு கடந்த 6 மாதங்களாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டார். இயல்பாகவே ராம்கியின் உடல்வாகு சிறப்பாக இருந்ததால் எளிதில் அவரால் உடற்கட்டை பேண முடிந்தது.

இந்த நிலையில் உடலில் தசைகளை அளவுகளை அதிகப்படுத்த ராம்கி விரும்பி உள்ளார். மஸ்குலராக இருக்க வேண்டும். பெரிய உடற்கட்டுடன் ஸ்டேஜ் ஏற வேண்டும். பாடி பில்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு சாதிக்க வேண்டும் என ராம்கி விரும்பி உள்ளார். இதற்காக அதிகம் புரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்துள்ளார். எனினும் அவர் விரும்பிய அளவில் உடலில் தசையின் அளவு அதிகரிக்கவில்லை. இதனால் கவலை அடைந்த ராம்கி, உடலை எவ்வாறு மேலும் மெருகேற்றுவது என தனது உடற்பயிற்சியாளரிடம் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: மதுபோதையில் அராஜகம்.. போலீஸ் எஸ்.ஐ. மண்டை உடைப்பு.. கணவன் - மனைவி கைது..!

இதை அடுத்து ராம்கியின் உடலை மேலும் கட்டுக்கோப்பாக மாற்ற, ராம்கிக்கு சில ஊக்கமருந்தை உடற்பயிற்சியாளர் பரிந்துரை செய்த உள்ளார். அந்த ஊக்கமருந்துகளை உடலில் செலுத்த சொன்னதாகவும் கூறப்படுகிறது. உடற் பயிற்சியாளரின் பேச்சால், ராம்கி அடிக்கடி ஊக்கமருந்து பயன்படுத்தி வந்து உள்ளார். இந்த நிலையில் ராம்கிக்கு கடந்த 2 நாட்களாக பயங்கர வயிறு வலி ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் அவருக்கு கடந்த 3 நாட்களாக சிறுநீர் வெளியேறவில்லை என கூறப்படுகிறது.

தீராத வயிற்று வலியாலும், சிறுநீர் வெளியேறாமலும் இருந்த ராம்கியின் நிலையை கண்டு அவரது அதிர்ச்சி அடைந்தனர். நேரம் ஆக ஆக ராம்கியின் நிலைமை மோசமாவதை உறவினர்கள் ராம்கியின் உறவினர்கள் அறிந்து கொண்டனர். இதை அடுத்து ராம்கியை மீட்டு மண்ணடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராம்கி பரிதாபமாக உயிர் இழந்தார். 

அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜிம் பயிற்சியாளரின் அறிவுரையின் பேரில் ஊட்டச்சத்து மருந்துகள் எடுத்துக் கொண்டதால் தான் ராம்கி உயிர் இழந்து இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காசிமேடு போலீசில் புகார் செய்து உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடற்பயிற்சியின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் பாணா காத்தாடி? சட்டவிரோதமாக காத்தாடி, மது விற்பனை? கொடுங்கையூரில் 2 பேர் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share