22 மேல் ஆசைப்பட்ட 58? அம்மா, அப்பா கண் எதிரே.. இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்..!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பெற்றோர் கண் முன்னே 6 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுசீந்திரன் [வயது 48 ] (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருடைய மனைவி சுனிதா [45] (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்த தம்பதிக்கு சுபஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 22 வயது மகள் உள்ளார். மகள் சுபஸ்ரீ, பி.எஸ்.சி படிப்பை முடித்து விட்டு உள்ளூரிலே வேலை பார்த்து வந்ததாக கூறப்பட்டுகிறது.
இதனிடையே சுசீந்திரன் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து கொண்டு, கூடமலை கிராமத்தில் விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். சுசீந்திரன் வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர் ஆடிட்டர் மணி என்கிற மணிகண்டன் [வயது 48]. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு உதவியாக சுபஸ்ரீ மருத்துவ சிகிக்கை அளித்து வந்தார். அவரது அலுவலகத்திற்கு உதவியாகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வந்த ஆடிட்டர் மணிகண்டன் ஆசைவார்த்தை கூறி சுபஸ்ரீயை திருமணம் செய்து கொள்வதாக வற்புறுத்தியாக கூறப்படுகிறது. சுபஸ்ரீ வேலையை விட்டு நின்று விட்டு வீட்டில் இருந்து வந்ததாக கூறப்பட்டுகிறது.
இந்நிலையில் சுசீந்திரன் அவரது மனைவி சுனிதா, மகள் சுபஸ்ரீயூடன் தனது இருசக்கர வாகனத்தில் கூடமலையில் இருந்து 74கிருஷ்ணாபுரம் நோக்கி தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது இவர்களை 2 இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மூவரும் சென்று கொண்டிருந்த இருச்சக்கர வாகனத்தின் மீது மோதி மூன்று பேரையும் கீழே தள்ளியுள்ளனர்.
இதையும் படிங்க: போதை ஊசி போட மறுத்த இளைஞர் கொலை.. ஓ போட்டது போதும் ஸ்டாலின்.. விளாசும் இபிஎஸ்..!
மேலும் பின் தொடர்ந்து வெள்ளை நிற காரில் வந்த ஆடிட்டர் மணிகண்டன் மற்றும் ஆறு பேர் கொண்ட கும்பல் தாய், தந்தையை சராமாரியாக தாக்கி விட்டு மகள் சுபஸ்ரீயை காரில் ஏற்றி கடத்த முயன்றுள்ளனர். ஆனாலும் பெற்றோர் விடாமல் போராடியுள்ளனர். இருந்தும் பெற்றோரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கூடமலையில் இருந்து கெங்கவல்லி செல்லும் வழியாக கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் தாக்குதலுக்கு ஆளான பெற்றோர்கள் தனது மகளை காரில் கடத்தி சென்று விட்டதாக கதறி அழுததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஒடி வந்து தம்பதியை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இளம்பெண்ணை யார் கடத்தியது? எந்த பகுதிக்கு கடத்தி சென்றார்கள்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர்களை தாக்கி விட்டு அவர்களது கண் முன்னே மகளை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இது டீச்சர் வீடு இல்லையா? வீடுமாறி திருடப்போன கொள்ளையர்கள்.. இருப்பதை சுருட்டிக் கொண்டு ஓட்டம்..!