×
 

போதையில் தகராறு.. இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் சரண்..!

மதுரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக் வீட்டிற்குள் வைத்து இளைஞரை கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த ஓய்வுபெற்ற தலைமைக்காவலர் காவல்நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் ஆனையூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 34).  இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது காவல் நிலையத்தில் அடிதடி, தகராறு உட்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே பகுதியில் அழகுபாண்டியின் வீட்டின் அருகே நடராஜன் (வயது 75) என்ற ஓய்வுபெற்ற தலைமை காவலர் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் அவர் மளிகை கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அழகுபாண்டியும், நடராஜனும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே அவ்வப்போது அழகுபாண்டி மது குடிப்பதற்க்காக நடராஜனிடம் பணம் கேட்டு வாங்கி உள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் காரணமாக அவ்வப் போது இருவருக்கும் இடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை தனது மளிகை கடையில் இருந்த நடராஜனிடம் அழகுபாண்டி மது அருந்த பணம் கேட்டு உள்ளார். ஏற்கனவே வாங்கிய பணம் நிறைய பாக்கி உள்ளது என நடராஜன் பணம் தர மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கு இடையிலும் வாக்குவாதம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்..? 5 நாட்களாகியும் மீட்க முடியாத அவலம்.. அச்சத்தில் குடும்பம்..!

இதனை அடுத்து நடராஜன் கடையை விட்டு, வெளியே வந்துள்ளார். மேலே உள்ள வீட்டிற்குள் நடராஜன் சென்று உள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற அழகுபாண்டி தொடர்ந்து பணம் கேட்டு நச்சரித்துள்ளார். மதுபோதையில் இருந்த அழகுபாண்டிக்கும் நடராஜனுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் திடீரென இருவருக்கும் வீட்டிற்குள் இருந்தபோது வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது ஆத்திரம் அடைந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் நடராஜன் அழகுபாண்டியை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். இதனை அடுத்து மயங்கி விழுந்த அழகு பாண்டியை தொடர்ந்து கம்பி உள்ளிட்டவற்றால் கொடூரமாக தாக்கி உள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த அழகுபாண்டி, ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி சரிந்துள்ளார். அதன் பின்னர் நடராஜன், ஆயுதத்துடன் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அழகுபாண்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்த அழகு பாண்டி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

பின்னர் காவல்துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மது போதையில் இருவர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நடராஜன், அழகுபாண்டியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 1836 ஆம் ஆண்டு காலத்து சுங்கம்.. மதுரையில் கிடைத்த முதல் கல்வெட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share