மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. சைகை மொழியால் துயரத்தை சொல்லி அழுகை... சீரழித்த காமுகன் கைது..!
வேலூரில் அக்கா முறையாகும் 31 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 21 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் 31 வயதான மாற்றுத்திறனாளி. இவரால் காது கேளாமலும், வாய் பேசவும் முடியாது. திருமணம் செய்து கொள்ளாமல் தனது பெற்றோருடனே வசித்து வருகிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி பெண்ணின் பெற்றோர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று ஒன்றாக வெளியில் கிளம்பி சென்றுள்ளனர். இரவு நிகழ்ச்சி முடித்து வீடு திரும்பிய போது, வீட்டில் இருந்த அவர்களது மகள், மிகுந்த சோர்வாக இருப்பதை கண்டு என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். வாய் பேச முடியாத அந்த மாற்றுத்திறனாளி பெண், தனக்கு நேர்ந்த துயரம் குறித்து சைகை மொழியில் அழுதபடி தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி பெண்ணின் பெற்றோர், அவர்களது உறவினரின் மகன் விஷால் என்பவனை சிறு வயது வளர்த்து வந்துள்ளனர். விஷாலுக்கு பெற்றோர் இல்லை என்பதால் தனது சொந்த மகனைப்போல் பாவித்து வளர்த்துள்ளனர். எப்போதும் இவர்களது வீட்டிற்கு வந்து செல்லும் விஷாலுக்கு தற்போது 21 வயதாகிறது. அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுன், விஷாலை தம்பியாக பாவித்து பாசம் காட்டி வந்துள்ளார். ஆனால் நேற்று அவரது பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த விஷால், முன் எப்போதும் இல்லாத மாதிரி நடந்துகொண்டுள்ளான். மாற்றுத்திறனாளி பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். காது கேளாத, வாய் பேச முடியாத அந்த பெண் செய்வது அறியாது திகைத்துள்ளார்.
இதையும் படிங்க: வேலூரில் களைகட்டிய மயான கொள்ளை விழா.. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
விஷால் செய்த கொடூரத்தில் அப்பெண் மயங்கிவிட, விஷால் அங்கிருந்து தப்பிஓடி உள்ளான். தனக்கு நேர்ந்த துயரத்தை சொல்லி அழ முடியாமல் தவித்துள்ளார் அந்த மாற்றுத்திறனாளி பெண். இரவு அவரது பெற்றோர் வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து சைகையில் தெரிவித்துள்ளார். கொதித்துப்போன பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் புகாரின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதற்குள் விஷால் தலைமறைவானான்.
விஷாலின் நண்பர்களை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அவர்களின் மற்றொரு நண்பன் வீட்டில் விஷால் பதுங்கி இருப்பது தெரிந்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு மது போதையில் இருந்த விஷாலை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பிள்ளை போல் வளர்த்து வந்த உறவினர் மகன் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹார்ன் அடிச்சது குத்தமா? சாலையில் வித்தை காட்டிய டியோ இளைஞர்கள்.. தட்டிக்கேட்ட முதியவரை அடித்தே கொலை செய்த கொடூரம்..