×
 

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; யூடியூப்பர் திவ்யா கள்ளச்சி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்...!

யூடியூப்பர் திவ்யா கார்த்திக் சித்ரா ஆகிய மூன்று பேரையும் தற்போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கணிஸ்தர் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா கள்ளச்சி என்ற யூ-டியூப்பரும் அவரது நண்பருமான ஈரோட்டைச் சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள அத்திகுளம் பகுதியில் ரீல்ஸ் எடுத்தனர். திவ்யா கள்ளச்சியிடம் இரண்டு சிறுவர்கள்  பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் படம் எடுத்துள்ளனர். 

இதுதொடர்பான வழக்கில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை  கொடுத்ததாக ஜனவரி 29ம் தேதி 4 பேரும் கைது செய்யப்பட்டனர். தற்போது  யூடியூபர் திவ்யா, கார்த்திக் சித்ரா, ஆனந்த் ஆகிய மூன்று பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். 

இதையும் படிங்க: கருணை கொலை செய்து விடுங்கள்.. கண்ணீர் மல்க புகார் மனு அளித்த பெண்..!

 இந்நிலையில் வழக்கின் முதல் குற்றவாளியான திவ்யா இரண்டாம் குற்றவாளியான கார்த்திக் நான்காம் குற்றவாளியான ஆனந்த் ஆகியோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை பிப்ரவரி 12 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக வழக்கின் மூன்றாவது குற்றவாளியான சித்ராவும் ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணை பிப்ரவரி ஏழாம் தேதி நடைபெற்றநிலையில் சிறையில் உள்ள யூடியூப்பர் திவ்யா கார்த்திக் சித்ரா ஆகிய மூன்று பேரையும் தற்போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கணிஸ்தர் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதையும் படிங்க: திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராசர் பெயர்.. பாமக தலைவர் அன்புமணி மகிழ்ச்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share