தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேஏசி) அடுத்தக் கூட்டம் ஹைதராபாத்தில் நடக்கும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தொகுதி மறுவரையறை பிரச்னையை டெல்லி அளவில் எடுத்துச் செல்வோம்.

இரண்டாவது கூட்டம் ஹைதராபாத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அப்போது மூடிய கதவு கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் என இரண்டும் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இது பொதுமக்கள் சார்ந்த முக்கிய பிரச்சினை. எனவே, இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதை நாங்கள் செய்ய விரும்புகிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலையிலேயே கையில் கருப்புக்கொடியுடன் வந்த தமிழிசை... 3 மாநில முதல்வர்கள் முன்னாடி மு.க.ஸ்டாலினுக்கு நேர்ந்த அவமானம்...!

முன்னதாக, தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் இறுதியில் நன்றி உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "அடுத்த கூட்டத்தை ஹைதராபாத்தில் நடத்த முதல்வர் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் அடுத்ததாக ஹைதராபாத்தில் கூடுவோம். இணைந்து போராடுவோம்; வெற்றி பெறுவோம்" என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பத்தமடை பாய், தோடர் சால்வை, காஞ்சி கைத்தறி பட்டு... தொகுதி மறுசீரமைப்பு குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெஷல் பரிசு...!