73 வயதான ஜெகதீப் தனகர் திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று அதிகாலை அவதிப்பட்டதையடுத்து, அதிகாலை 2 மணி அளவில் எய்ஸ்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எய்ஸ்ம் மருத்துவமனையில் உள்ள இதயநோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் தனகர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயநோய் சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் ராஜீவ் நராங் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

ஜெகதீப் தனகருக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரின் நிலைமை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்தாகவும் எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எய்ம்ஸ் மருத்துவர்களிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான ஜேபி நட்டா தனகரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தை ‘உரசிப்’ பார்த்த துணை குடியரசு தலைவர்: சிபிஐ இயக்குநர் நியமனத்தில் விமர்சனம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் நாளை(10ம் தேதி) தொடங்கஇருக்கும் நிலையில், ஜெகதீப் தனகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரால் மாநிலங்களவையை நடத்த முடியாது. அவருக்குப் பதிலாக பீகார் மாநிலத்தின் ஜனதா தளம் எம்.பி.யும், மாநிலங்களவை துணைத் தலைவருமான ஹரிவன்ஸ் நாராயண் சிங் அவையை நடத்துவார் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர்ல வந்தாலும் பதவி கிடையாது! நான் தளபதி ரசிகன்... மார்த்தட்டும் புஸ்ஸி ஆனந்த்