மகனின் இழப்பை தாங்கிக்கொண்ட அதே சமயம் கனத்த இதயத்துடன் பெற்றோர் செய்த செயல் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது
ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன் மகன் சஞ்சய் (22). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகன விபத்தில் சிக்கி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அதன்பின் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சஞ்சயின் பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி அவரது உடல் உறுப்புக்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின் சொந்த ஊரான மேலக்கிடாரத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் சஞ்சயின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அரசு மரியாதையுடன் மேலக்கிடாரம் கிராம மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கட்டுக்கட்டாய் கோடிக்கணக்கில் பணம் ..போலீசை அலறவிட்ட லாட்டரி நாகராஜ்..!