சென்னை காவல் தலைமையகத்தில் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் மீதான விசாரணைகளுக்கான கையேட்டை இன்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டார். இந்தியாவின் முன்னணி கிரிப்டோ பரிமாற்றங்களில் ஒன்றான ஜியோட்டஸ் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையில் முன்னணி சட்ட நிறுவனமான ஹாஷ் லீகல் இணைந்து எழுதிய இந்த விரிவான கையேடு, கிரிப்டோ தொடர்பான வழக்குகளைக் கையாளும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது.

இந்த வெளியீட்டு விழாவில் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், இந்த கையேடு கிரிப்டோ வழக்குகளை திறம்பட கையாள தேவையான நிபுணத்துவத்தை வழங்குவதுடன் விசாரணை மேற்கொள்பவர்களை திறம்பட செயல்பட வைக்கும் என கையேட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: போக்சோ வழக்குகளில் விடுதலை பெற்றவர்களுக்கு எதிரான மேல்முறையீடு... டிஜிபி-க்கு பறந்த கடிதம்..!
மேலும், இது போன்ற கையேடுகள் கிரிப்டோ வழக்குகளைக் கையாள்பவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் எனவும் இது ஒரு சிறந்த முயற்சி எனவும் கூறிய அவர், ஜியோட்டஸ் போன்ற அமைப்புகளின் நிபுணத்துவத்தை காவல் படை முழுமையாகப் பயன்படுத்தும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதுக்குறித்து ஜியோட்டஸ் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் சுப்புராஜ் பேசுகையில், சட்ட அமலாக்க அதிகாரிகளுடனான பல வருட தொடர்புகளிலிருந்து இந்த கையேடுக்கான யோசனை உருவானது. பல அதிகாரிகள் கிரிப்டோ வழக்குகளைக் கையாளத் தயங்குவதைக் கண்டறிந்தோம், மேலும் அவர்கள் பெரும்பாலும் 'இந்தியாவில் கிரிப்டோ சட்டப்பூர்வமானதா?' அல்லது 'கிரிப்டோ தொடர்பான குற்றங்களைத் தீர்க்க முடியுமா?' போன்ற அடிப்படைக் கேள்விகளுடன் போராடினர், இதுவே இந்த இடத்தில் விசாரணைகளை மறைமுகமாகத் தீர்மானிக்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட வழிகாட்டியை உருவாக்க எங்களை வழிநடத்தியது என்றார்.
இதையும் படிங்க: ரூ.8.36 லட்சம் கோடி மோசடி..! கிரிப்டோகரன்சி மோசடியாளர் இந்தியாவில் கைது..!