எப்படி 525 வாக்குறுதிகளை 2021 தேர்தலில் எடப்பாடி கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறாரோ, அதே போல கனிமொழி பாராளுமன்ற தேர்தலுக்கு 64 பக்க தேர்தல் அறிக்கையை கொடுத்து அதை நிறைவேற்றாமல் இன்று வரை இருக்கிறார் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் VVD சிக்னல், எம்ஜிஆர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, வாரிசு அடிப்படையில் இந்த ஆட்சி நடைபெறுகிறது. கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தின் இரண்டு சபைக்கும் தலைவராக இருக்கிறார். அவரது அப்பாவுக்கு இணையான டி.ஆர். பாலு அவர்களை புறம் தள்ளிவிட்டு வாரிசு என்கிற அடிப்படையில் டெல்லியில் அத்தனைக்கும் தலைவர் நான் என்று நடக்கிறார்.

இதையும் படிங்க: தூக்கில் தொங்கத் தயார்..! மும்மொழிக் கொள்கைகக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என திமுக நிரூபிக்குமா? திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம்
கனிமொழி இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு 64 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். வாக்குறுதி கொடுத்தது பற்றி பாராளுமன்றத்தில் கனிமொழி இதுவரை பேசவே இல்லை.
எப்படி 525 வாக்குறுதிகளை 2021 தேர்தலில் எடப்பாடி கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறாரோ, அதே போல பாராளுமன்றத்திற்கு என்று 64 பக்க தேர்தல் அறிக்கையை கொடுத்து அதை நிறைவேற்றாமல் இன்று வரை இருக்கிறார் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் தமிழகத்தில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது என்பதை கனிமொழி உணர்ந்து இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.
இந்த பாவிகள் ஆட்சியில் தினசரி கெலைகள், கொள்ளைகள் நடப்பது போல, கற்பழிப்பு நடப்பது போல தங்கம் விலை எங்கு போய் நிற்கப் போகிறது என்று தெரியவில்லை. வேண்டுமானால் நம் பிள்ளைகளுக்கு பெயர் வைத்துக் கொள்ளலாம் தங்கத்தாய், தங்கப்பன், தங்கராசு,பவுன் தாய், பவுன் அம்மா என்று பெயர் வைத்து கூப்பிட்டு கொள்ளலாமே தவிர ஒரு போட்டு தங்க நகை வாங்க முடியாது.

எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையாகிறது.
ஸ்கூல் அருகில் கூலிப் விற்பனை செய்யப்படுகிறது. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பல்லுக்கு இடையே அதை இடுக்கி கொண்டு அனைத்து தவறுகளும் செய்கின்றனர். படிக்கும் சகோதரிகளை, குழந்தைகளை 5 பேர், 10 பேர் சேர்ந்து கேவலப்படுத்துகின்றனர்.
மத்திய அரசின் நிதிக்காக மும்மொழி கொள்ளையை ஏற்றுக்கொண்டு ஆதரித்து கடிதம் கொடுத்துவிட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்றவுடன் இன்று எதிர்ப்பது போல் ஒரு நாடகத்தை நடத்துகின்றனர்.

நீங்கள் எதிர்பார்க்காத கூட்டணி விரைவில் வரப்போகிறது. அதற்குரிய வியூகத்தை எடப்பாடியார் அறிவித்து விட்டார்கள். நாம் யாரையும் போய் கேட்கவில்லை. சூழ்நிலை, தெய்வத்தின் அருளால் அப்படியே வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன. விரைவில் வெளிவர போகிறது. இப்போது சொன்னால் உடனே போய் பெட்டியை கொடுத்து விடுவார்கள் அதனால் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறோம் என்றார்.
இதையும் படிங்க: ஓ.பி.எஸை நேருக்கு நேர் பார்த்து ஷாக்கான எடப்பாடியாரின் மகன் மிதுன்… அடுத்து நடந்த ட்விஸ்ட்..!