மத்திய அரசு வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, “ மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ4315 கோட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிதி இல்லாததால், வேலையாட்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதயளிப்பு சட்டத்தின் 3வது பிரிவு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால், 100நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றும் மக்களுக்கு தினசரி ஊதியத்தை வாரத்தில் ஒருநாளோ அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறையோ ஊதியம் வழங்கிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதயளிப்புத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளுக்கான செலவு தொகையில் 60% மத்திய அரசு வழங்கும், மீதமுள்ள 40% மாநிலஅரசுகள் வழங்கும். ஆனால், கருவிகள் வாங்குவதற்கான நிதியை மத்திய அரசு வழங்காததால், எதிர்காலத்தில் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் மூலம் நடக்கும் பணிகள் பாதிக்கப்படலாம். அது மட்டுமல்லாமல் நிதி வழங்குவதில் தொடர்ந்து தாமதம் நடக்கும்போது, உள்ளூர் வாடகைதாரர்கள், கச்சா பொருட்கள் வழங்குவோருக்கு சிக்கல் ஏற்பட்டு பணிகள் தொடர்ந்துநடப்பது பாதிக்கும்.

2024 இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு ரூ.86ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது. இந்தத் திட்டத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை மறு ஆய்வுசெய்து கூடுதலாகவும் நிதி ஒதுக்கவில்லை.
கடந்த ஆண்டு, 100 நாட்கள் வேலைத்திட்டம் என்பது தேவை அடிப்படையில் செயல்படுத்துவது. எப்போது இந்தத் திட்டத்துக்கு அதிகம் தேவையிருக்கிறதோ அப்போது கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இதையும் படிங்க: பட்ஜெட் 2025: ரூ.10 லட்சம் வருமானம் வரை வரியில்லை, 25 % புதிய வரி அறிமுகம்?

2020-21ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவலில் 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு ரூ.61500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்தது, அதன்பின் ரூ.1,11,500 கோடி ஒதுக்கியது.
இந்தத் திட்டத்தை கண்காணித்து வரும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில் “ 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்காமல் தேவையை செயற்கையாக அரசு புதைக்கிறது.இது தொடர்பாக ஊரகமேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையை அடுத்தமாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது. கிராமங்கள் அளவில் 100 நாட்கள் திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்படும்போது, போதுமான நிதி பற்றாக்குறை இந்தத் திட்டத்தை செயல்படவிடாமல் முடக்குகிறது என நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 22 சதவித ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் ... டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு..