திமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள ட்விஸ்ட்டான பதில் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். சென்னை தேமுதிக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரேமலதா, அங்கிருந்த கேப்டன் விஜயகாந்தின் முழு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ச்சியாக தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதன் தொடர்ச்சி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் கேப்டன் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வழி, அந்த வழியில் தான் நாங்கள் பயணிக்கிறோம். இன்று என் பிறந்தநாள் அதை முன்னிட்டு தமிழக அரசுகிட்ட நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், தமிழகம் முழுவதுமே தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதை இந்த நேரத்திலே தமிழக அரசுக்கு நாங்கள் ஒரு வேண்டுதலாக வைக்கிறோம்.

இதையும் படிங்க: பிரேமலதா விஜயகாந்துக்கு அண்ணாமலை, தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து.. பாஜக - தேமுதிக கூட்டணி உறுதியாகி விட்டதா..?
அதே மாதிரி தொகுதி சீரமைப்பு விவகாரத்திலும் தமிழ்நாட்டின் 40 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை மத்திய அரசு குறைத்தாலும், உறுதியாக தேமுதிக தமிழ்நாட்டுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் தமிழக அரசுடன் நாங்கள் நிச்சயமாக சேர்ந்து எதிர்ப்போம் என்பதையும் இந்த நேரத்தில் நான் பதிவு செய்கிறேன். வருகின்ற சட்டமன்ற தேர்தல்ல அதிமுகவோட இன்னும் ஒரு வருஷம் இருக்குது அது இன்னைக்கே நான் சொல்லிட முடியாது. இன்னும் அடுத்த பிறந்த நாளும் வரப்போகுது. அடுத்த மார்ச் 18 அன்னைக்கு இந்த கேள்வியை நீங்க கேட்டீங்கன்னா அதற்கான தெளிவான பதில் நான் சொல்றேன். இன்னும் ஒரு வருஷம் இருக்கு கொஞ்சம் பொறுத்துங்க.

234 தொகுதிகளிலும் நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும் அதுல எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதனால் நீங்க வந்து அதை இட்டுக்கட்டி ஏதாவது பண்ண நினைச்சீங்கன்னா, அந்த குழப்பத்திற்கு எல்லாம் நாங்க இல்லை, நாங்க தெளிவா இருக்கோம். 2026 மார்ச் 18 என்னுடைய பிறந்தநாள் அன்றைக்கு அதை நான் உறுதியாக உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன் என செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யூடர்ன் போடும் பிரேமலதா விஜயகாந்த்.? திமுக கூட்டணியில் தேமுதிக.. அறிவாலயத்தில் திகுதிகு நகர்வுகள்.!?