தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாவட்ட மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆ.ஜெசி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "சத்துணவு ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தில்தான் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்காமல் வெளிமுகமையிடம் அரசு வழங்கியுள்ளது. காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் வரவேற்கிறது. தற்போது 52 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன். இப்பணியிடங்களை நிரப்பி காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.
ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழக அரசு பேச்சுவார்த்தை எனக்கூறி கண்துடைப்பு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது. தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் சரண்டர் விடுப்பை 1.4.2026-க்குள் வழங்கப்படும் என கூறியுள்ளனர். ஆனால், வரும் 2026இல் திமுக ஆட்சி இருக்குமா, இல்லையா என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் கையில்தான் உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாகச் சத்துணவு ஊழியர்களாகப் பணியாற்றிய காலமுறை ஊதியம் வழங்கப்படும் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது கண்டுகொள்ளாமல் இருப்பது, சத்துணவு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எஞ்சிய ஓராண்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும் எங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் போராட்டத்துக்கு செல்வோம்" என்று ஜெசி கூறினார்.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் ஒரு மரண சாஸ்திரம்.. திமுக அரசை பொளந்துகட்டிய ஹெச். ராஜா..!!
இதையும் படிங்க: அதை நாங்கதான் செய்யணும்.. நீங்க ஏன் போராடுறீங்க அண்ணாமலை..? சீமான் சுளீர் கேள்வி.!