நாடாளுமன்ற விவாதத்தின் போது தமிழகத்திற்கு 11 வந்தே பாரத் ரயில்களை வழங்கியமைக்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவை பாராட்டி, நன்றி தெரிவித்துள்ளார் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்.

அப்போது, ''மோடி அவர்களின் நல்ல பணி அனைவராலும் பாராட்டப்படுகிறது'' எனத் தெரிவித்தார். மக்களவையில், தென்சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வந்தேபாரத் ரயில்கள் இயக்கம் பற்றி கேள்விகள் கேட்டிருந்தார். இதற்கு ரெயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். இந்த கேள்வி நட்சத்திர கேள்வி என்பதால் அதன்மீது தமிழச்சி தங்கபாண்டியன் துணைக்கேள்வியும் கேட்டார். அதாவது, “தமிழ்நாட்டில் 11 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். அதற்கு மகிழ்ச்சி.
இதையும் படிங்க: பாஜக அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மனம் குளிர வரவேற்கும் டாக்டர் ராமதாஸ்!!

ரயில் பெட்டிகள் சென்னை ஐ.சி.எப்.பில் உருவாக்கப்படுவதாக இருந்தாலும், அந்த ரயில்களில் வட இந்திய உணவுகளே வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் புறக்கணிக்கப்படுகிறது. ரயில் உணவக தொழிலாளர்கள் இந்தியிலேயே பெரும்பாலும் பேசுகிறார்கள். இது பயணிகளுக்கு கடினமாக இருக்கிறது. அவர்கள் கட்டாயம் ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச வேண்டும்.
மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு நேரடி வந்தேபாரத் ரயில்கள் இயக்க வேண்டும்” என கேட்டார். இதற்கு அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளிக்கையில், “ பயணிகளுக்கு உள்ளூர் உணவுகளை வழங்க புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் பயணிகளுக்கு உள்ளூர் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விரிவுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: 18 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்..? ஓட்டுக்காக திமுகவின் கபட நாடகம்- சீமான் ஆவேசம்..!