தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் 72-ஆவது பிறந்தநாள் மாா்ச் 1-ஆம் தேதி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை தூத்துக்குடி மாநகர திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே . கேக் வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 72 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு திமுகவினர் வழங்கினர்.

இதைத்தொடா்ந்து வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து தூத்துக்குடி மாநகரில் உள்ள முதியோா் மற்றும் ஆதரவற்றோா் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்பட்டும். இன்றைய தினம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்படுகிறது. பின்னர், மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகரம் 60ஆவது வாா்டு 11 வது வாா்டு பகுதியில் மாலை 6 மணிக்கு நல திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..! இந்துசமய அறநிலையத்துறையில் இவ்வளவு புதிய திட்டங்களா..? கலக்கும் ஸ்டாலின் திமுக அரசு..!
இதையும் படிங்க: துருப்பிடித்த இரும்பு கை...முதலமைச்சரை துணை நடிகராக சொல்லுங்க...! அலறிய அண்ணாமலை!