''குடும்ப ஆட்சியை எதிர்த்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரிலான அரங்கில் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என அழைக்க வேண்டும்'' என தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய ஆதவ் அர்ஜூனா,''தமிழக வெற்றி கழகத்தை எதிர்த்து நமது குரலை உடைக்க வேண்டும் என பல பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.நிறைய பொய் பிரச்சாரங்களை உருவாக்குவார்கள். அப்படி செட் பண்ணப்பட்டவர்தான் அண்ணாமலை அவர்கள்.

அதாவது, டெல்லியில் மோடி உட்கார்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் பண்ணிக் கொண்டிருக்கிறார். திமுக இங்கே அண்ணாமலையையே செட் பண்ணி விட்டது. அதுதான் புரியவில்லை. நன்றாக பாருங்கள் ... எப்படி செட் பண்ணுகிறார் பாருங்கள். எங்கள் தலைவர் புலி மாதிரி அமைதியாக இருக்கும்போது திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல்... எங்களுடைய குறிக்கோள் ஒட்டுமொத்த திமுகவை நாங்கள் கேள்வி கேட்டு, மக்கள் பிரச்சினையில் குரல் கொடுப்பதற்கு நாங்கள் பிரச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இதையும் படிங்க: மத்தியில் பாஜக அரசுக்கு நாங்கதான் எதிர்கட்சி… கங்கிரஸை கதறவிட்டு கெத்துக் காட்டும் மு.க.ஸ்டாலின்..!

சம்பந்தமே இல்லாமல் வந்து எங்கள் தலைவரை பார்த்து அண்ணாமலை விமர்சிக்கிறார். எங்கள் தலைவருக்கு சினிமா ஒரு தொழில். ஒரு தொழிலை கேவலமாக பேசக்கூடிய ஒரு தலைவரை பாஜக வைத்திருக்கும் போதே அந்த கட்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பது முடிவாகிவிட்டது. அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசனுக்கு எல்லாம் தெரியும் இந்த தலைவரை பற்றி... எந்த அளவிற்கு என்று தெரியுமா? திமுகவிற்காக அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனையை கையில் எடுக்கும் பொழுது திடீரென சட்டையை கழட்டி விட்டு, சாட்டையை வைத்து அடித்துக் கொள்கிறார். என்ன அரசியல் செய்கிறீர்கள்? யாருக்காக இந்த அரசியல்?

பாவம் மோடி. டெல்லியில் உட்கார்ந்து கொண்டு நமக்காக ஒரு பையன் சாட்டையில் அடித்துக் கொண்டிருக்கிறான். நமக்காக ஒருத்தன் கத்திக் கொண்டிருக்கிறான். நமக்காக ஒருத்தன் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அங்க தான் பிரச்சனையே இருக்கிறது. இனிவரும் காலங்களில் எங்கள் தலைவரையும் கட்சியையும் தொட்டால் உங்களுடைய உண்மையை மக்கள் மத்தியில் தூக்கி எறிவோம். எழுதிக் கொள்ளுங்கள். எங்கள் மீது நீங்கள் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் 10 வருடம் நாங்கள் ஆட்சியில் இல்லை.

ஊழல் செய்த பணத்தை வைத்து லண்டனில் நாங்கள் போய் கொண்டாடவில்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். என் தலைவர் வருஷத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிப்பதை விட்டு விட்டு வருகிறார். நீங்கள் ஆட்சிக்கு வந்து ரெட் ஜெயன்ட் கம்பெனி வைத்து சினிமாவில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதுவா அரசியல்? இல்லை இதுவா அரசியல்..?'' என க் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: காங்கிரஸை டம்மியாக்கி… திமுகவை தேசிய அளவில் ராஜ்ஜியமாக்கத் துடிக்கும் மு.க.ஸ்டாலின்..?