பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி மொழி எழுத்துக்களை அழித்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நூதன முறையில் பதிலடி கிடுத்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கவினர் தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மொழிப் போராட்டம் எழும் சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்று கிழமை பொள்ளாச்சி ரயில் நிலையத்தில், பெயர் பலகையில் பொள்ளாச்சி சந்திப்பு என இந்தி மொழியில் எழுதப்பட்டு இருந்த எழுத்துகளை கருப்பு பெயிண்ட் கொண்டு அழித்தனர்.
இதையும் படிங்க: 'திஸ் இஸ் ராங் ஸ்பீச் ப்ரோ...' விஜய் பாணியிலேயே பதிலடி கொடுத்த அண்ணாமலை..!

இச்சம்பவம் தொடர்பாக தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ரயில்வே துறையினர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இச்சம்பவம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் உள்ள இந்தி மொழியை அழித்தவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் மும்மொழி கொள்கையை கடைப்பிடித்து, மூன்று மொழிகளை பயின்று வருவதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று திமுக கழக சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையிலான திமுகவினர் கருப்பு ஆடு ஒன்றை கையில் பிடித்தபடி சாலையில் ஊர்வலமாக வந்தனர். மேலும் ஆட்டிற்கு அண்ணாமலை என பெயர் சூட்டி அதனிடம், தென்றல் செல்வராஜ் தனது பேரன் பயிலும் பள்ளியின் பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் பட்டியலில் நகலை காண்பித்து, அதில் இந்தி மொழி இல்லை எனவும், தனது வம்சா வழியினர் இருமொழிக் கொள்கையை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா போட்ட பதிவுல இதை கவனிச்சீங்களா?.... துள்ளாட்டம் போடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்...!