இந்தியைத் திணிப்பதாக எதிர்ப்பது திமுகவின் தேர்தல் நாடகம் என தமிழக அரசை சீமான் கடுமையாக விமர்சிக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ கவிதையை மேற்கோள் காட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
மும்மொழிக் கொள்கையில் திமுகவின் நிலைப்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து வரும் சீமான், ‘புதிய கல்விக் கொள்கையை ஏற்று கொண்டால் தான் நிதி தருவோம்' என ஒன்றிய பாஜக அரசு சொல்லும்போது, ‘என் நிலத்தில் இருந்து எந்த வரியும் வராது' என்று தடுத்து நிறுத்த இந்த அதிகாரத்திற்குத் துணிவில்லை. இது கோழைகளின் கூடாரம். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது 'இந்தி தெரியாது போடா' என்று சொல்லும். ஆளுங்கட்சியாக இருக்கும் போது 'கேலோ இந்தியா' நடத்தும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது கோபேக் மோடி என்பார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும் போது வெல்கம் மோடி என அழைப்பார்கள். இந்தி தெரியாது போடா! இந்திக்காரனே வாடா! இது தான் திமுகவின் கோட்பாடு'
'
தேர்தல் நெருங்குவதால் திமுகவினர் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பெரிய நாடகத்தை மக்களுக்கு முன்னால் நடத்துகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை அவர்கள் எப்போதோ ஏற்றுக் கொண்டார்கள். இந்த இல்லம் தேடி கல்வியே அதற்குள்ளதாகத்தான் இருக்கிறது. ஜவகர்நேசன் என்கிற ஐயா, தமிழ்நாட்டின் கல்வி வகுக்கிற குழுவில் இருந்தார். அவர் ஏன் வெளியேறி விட்டார். அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக சொல்லிவிட்டு வெளியில் வந்து கொடுத்த பேட்டியில், ''மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை இந்த திமுக அரசு அப்படியே ஏற்கிறது. அதன் பிறகு நாம் ஒரு கல்வித் திட்டத்தை வகுக்கிறோம் என்பது வேடிக்கையானது என்று வெளியேறி விட்டேன்'' என்கிறார்.
இதையும் படிங்க: இதனால்தான் என்னை மாணவிகள் அப்பா, அப்பா என்று அழைக்கிறார்கள்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி..!

தேர்தல் வரும் போது நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது இந்தி எதிர்த்து போராடினீர்கள். இப்போது தமிழகத்திற்கு இந்திக்காரர்கள் ஒன்றரை கோடி பேர் வந்திருக்கிறார்கள். இந்தியை திணித்ததால் தானே நீ எதிர்க்கிறாய். நான் இந்திக்காரனையே திணிக்கிறேன் என்கின்றனர் திமுகவினர். உளமாற இந்தியை திமுக எதிர்கிறதா? எதிர்ப்பதானால் எதற்கு சௌகார்பேட்டையில் இந்தியில் பேசி வாக்கு சேமிக்கிறாய்? எதற்காக ஹிந்தியில் சுவரொட்டி வைக்கிறாய்? நீங்கள் நடத்துகிற பள்ளியில் இந்தி மொழி பாடமாக இருக்கிறதா? இல்லையா?

மும்மொழிக் கொள்கையில் திமுகவை நீங்கள் நம்பாதீர்கள். தேர்தலுக்காக நடிக்கிறார்கள். இந்த சிக்கலுக்கு திமுக அன்றே முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்'' என்றெல்லாம் கடுமையாக திமுக அரசை விமர்சித்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால் அவரது இந்த விமர்சனத்து திமுக தலைமையோ, இரண்டாம் கட்டத் தலைவர்களோ சீமானின் பேச்சுக்கு எதிராக பதிலளிக்கவில்லை, விமர்சிக்கவும் இல்லை. ஆனால், திருமாவளவன் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களை வைத்து சீமான் பெரியாரை பற்றி பேசியதற்கு தற்போது விமர்சித்து வருகின்றனர்.

''இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்தளப் பதிவில், ''இன்பத் திராவிடத்தில் இந்திமொழியே - நீ இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! அன்பின் தமிழிளைஞர் தாய் அளித்திடும் - நல் அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில் உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?'' என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதையை மேற்கோள் காட்டி இந்தித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர்.
இந்தித்திணிப்பு, மும்மொழிக்கொள்கை திமுகவின் நாடகம் என காத்திரமாக சீமான் குற்றச்சாட்டுகளை முன்வைக்க, அதற்கு பதிலடி கொடுக்காமல் திமுகவோ கவிதையால் எதிர்ப்பைக் காண்டிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: திமுகவின் நாடகம்..! இந்தியை 'இந்திய மொழி' என்று சொன்ன பைத்தியக்காரன் யார்..?- சீமான் ஆத்திரம்..!