அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5இல் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் , ஜனனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரீஸ் உள்ளிட்டவர்கள் போட்டியிட்டனர். இத்தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம்.
அதன்படி அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் இன்று பதவியேற்றார். கோலாகலமாக நடைபெற்ற விழாவில் அவருடன் துணை அதிபராக ஜேடி வான்ஸும் பதவியேற்றார். பதவியேற்புக்கு பிறகு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தனது திட்டங்களை வகுத்து, தொடக்க உரையை நிகழ்த்தினார் ட்ரம்ப். அமெரிக்க வரலாற்றில் அதிபராக இருந்து தேர்தலில் தோல்வியுற்று, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது இரண்டாவது முறையாகும். அந்த வகையில் டொனால்ட் ட்ரம்ப் சாதனை படைத்துள்ளார்.
இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். எலான் மஸ்க், ஜெஃப் பிசோஸ், மார்க் ஸூகர்பெர்க் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில், 2,500 போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு 'பொது மன்னிப்பு' பதவி விலகும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி