காசாவில் இஸ்ரேல் மீண்டும் ஒரு போரைத் தொடங்கினால், அதை ஆதரிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். காசா பணயக்கைதிகள் ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை இஸ்ரேல் முன்னெடுக்க விரும்பினாலும் சரி, அல்லது மீண்டும் சண்டையைத் தொடங்க விரும்பினாலும் சரி, இரண்டு சூழ்நிலைகளிலும் அமெரிக்கா அதை ஆதரிக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் அவர் சமீப காலலமாக தொடர்ந்து போர் எதிர்ப்பு நிலைப்பாட்டைக் காட்டி வந்தார். காசாவில் போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதில் அவரது பங்கு முக்கியமானதாகக் கருதப்பட்டது. இருப்பினும், அவரது இந்த நிலைப்பாட்டுக்குப் பிறகு, காசாவில் மீண்டும் போர் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

பணயக்கைதிகளை மீண்டும் கொண்டு வர காசாவில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டுமா? அல்லது மீண்டும் போரைத் தொடங்க வேண்டுமா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது. இது குறித்து டிரம்ப், 'நான் அவர்களுடன் இருக்கிறேன். அங்கே என்ன நடக்கிறது என்று நீங்கள் பார்க்கும்போது, ஒரு குழு பணயக்கைதிகள் மிகவும் மோசமான நிலையில் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் ஜெர்மனியில் உள்ள ஒரு வதை முகாமிலிருந்து வந்தது போல் இருந்தது. சில நேரங்களில் நீங்கள் கடினமான முடிவுகளையும் எடுக்க வேண்டியிருக்கும். இஸ்ரேல் எந்த முடிவை எடுத்தாலும், அதை நாங்கள் ஆதரிப்போம்'' என்றார்.
இதையும் படிங்க: டிரம்பிற்கு எதிராக பேசினால் 5 லட்சம் கோடி.. உக்ரைன் அதிபரை மிரட்டும் அமெரிக்கா..!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுகுறித்து, ''டிரம்ப் மிகவும் கோபமாக இருக்கிறார். குறிப்பாக நேற்று குழந்தைகளுக்கு நடந்தது அவரை மிகவும் கோபப்படுத்தியது. ஏரியல் மற்றும் கிஃபர் பிபாஸ் ஆகிய குழந்தைகளின் மரணங்களைக் குறிப்பிட்டு, டிரம்ப், அது காட்டுமிராண்டித்தனமானது. இந்த நவீன யுகத்தில் இப்படி எல்லாம் நடக்கும் என்று நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆனால் அது நடந்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், எங்கள் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்'' என்று நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேலின் முடிவை அவர் ஆதரிப்பார் என்பது டிரம்பின் பேச்சில் இருந்து தெளிவாகிறது. இஸ்ரேல் பேச்சுவார்த்தைகள் மூலம் பணயக்கைதிகளை திருப்பி அனுப்புவதைத் தொடர்கிறதா? அல்லது மீண்டும் காசாவைத் தாக்கி ஹமாஸுடன் சண்டையைத் தொடங்குகிறதா? இது இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் வலுவான ஆதரவையும் காட்டுகிறது. அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு உதவி செய்து வருகிறது. சமீபத்திய காசாவில் நடந்த போரில் கூட, இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து தொடர்ந்து உதவி பெற்று வருகிறது.
இதையும் படிங்க: அதிர்ச்சி… ரூ.1 லட்சமாக உயரப்போகும் தங்கம் விலை… ட்ரம்ப் கையில் ட்ரம் கார்டு..!