''பெரியாரை பற்றி நான் பேசவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் என் வீடு மீது குண்டு வீச வருவீர்களா? நான் பெரியாரை பற்றி இன்னும் பேசத் தொடங்கினால் எல்லோரும் தீக்குளித்து செத்துவிடுவீங்கடா'' என ஆவேசம் அடைந்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் டிங்கர் குமரன் உள்ளிட்ட அந்த இயக்கத்தின் 10 நிர்வாகிகளை சென்னை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பெட்ரோல் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தந்தை பெரியாரை இழிவாக பேசி வரும் சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சீமான், ''பெரியார் குறித்து நான் இன்னமும் பேசவே ஆரம்பிக்கவில்லையே.. அதற்குள் குண்டு போட வருவீங்களா? பெரியாரை யாரும் இழிவாக பேசவில்லை.பெரியார் பேசியதை, எழுதியதை வைத்துத்தான் பேசி வருகிரேன். நான் பெரியாரைப் பற்றி பேசத் தொடங்கினால் நீ என்ன செய்வாய்? நீ என்ன தீக்குளித்து செத்துப் போவியா? என்ன பண்ணுவீங்க... இதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் நானில்லை. ஏதோ வேற வேலை இருக்கிறது. அதனால் இடைவெளி விட்டிருக்கிறேன். மறுபடியும் ஆரம்பித்துவிடுவேன். பார்த்து அடக்கமா இருங்க. தோண்டித் தோண்டி எடுத்து என் முன்னாடி நிறுத்தாதீங்க'' என சீமான் ஆவேசப்பட்டார்.
இதையும் படிங்க: என்கிட்ட ஏன் கேக்குறீங்க..அப்பா கிட்ட போய் கேளுங்க..! தொடர் பாலியல் சீண்டல்கள் குறித்து சீமான்
இதனை அடுத்து ஹிந்திப்போராட்டக் குறித்து பேசிய அவர், ''இந்தி திணிப்பிற்கு எதிராக தி.மு.க., போராட்டம் நடத்தவில்லை. நாடகம் நடத்தி கொண்டு இருக்கிறது. 60 வருடமாக நடத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். தி.மு.க., காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது. கட்டாய இந்தி திணிப்பில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

என்னை மீறி, முடிந்தால் இந்தி மொழியை திணித்து காட்டுங்கள். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள் நீடிப்பது, வெளியேறுவதும் அவரவர் சொந்த விருப்பம். இது ஒரு ஜனநாயக இயக்கம். விரும்பியவர்கள் கட்சிக்கு வருவார்கள், போவர்கள், இது குறித்து பேசிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை'' எனத் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இந்த மாதம் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பரப்புரையின் போது, பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சீமானின் இந்த பேச்சுக்கு திக, தபெதிக உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தன.

மேலும் பரப்புரையின் போது, "பெரியார் வைத்திருப்பது வெங்காயம். என் தலைவன் வைத்திருப்பது வெடிகுண்டு. பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது, தான் வெடிகுண்டு வீசுவேன்" என பேசியதும் சர்ச்சையை கிளப்பியது. இந்த பேச்சுகளுக்காக சீமான் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கலகலத்து வரும் நாம் தமிழர் கட்சி... மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் விலகல்...