சென்னையில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு செய்யக்கூட உரிமையில்லையா என தவெக பெண் நிர்வாகிகள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் மத்திய சென்னை தவெக சார்பில் கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தின் வாசலில் துண்டு பிரசுரங்களை மக்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
தகவல் அறிந்து வந்த திருமங்கலம் காவல்துறையினர் தவெக பெண் நிர்வாகிகள் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதைஇ தடுத்து நிறுத்தினர். பின்னர் தவெக பெண் நிர்வாகிகளை கைது செய்தனர். அப்போது பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு செய்யக்கூட உரிமையில்லையான தவெக பெண் நிர்வாகிகள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் உருவானது .
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு உதவி...நேரில் சந்திக்க துடித்த விஜய்