அற்பமான மேல்முறையீடுகளை தாக்கல் செய்வதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஒரு கொள்கையை வகுத்து அதை செயல்படுத்தும் இப்படியும் வலியுறுத்தி இருக்கிறார்கள். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ரேடியோ ஃபிட்டர் ஒருவருக்கு ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்க ஆயுதப்படை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசை கண்டித்து நீதிபதிகள் கூறியதாவது: -

ஆயுதப்படை தீர்ப்பாயம் மூலம் ஊனமுற்றோர் ஓய்வூதிய நிவாரணம் பெற்ற ஆயுதப்படை வீரரை உச்ச நீதிமன்றத்துக்கு இழுக்க வேண்டிய அவசியமில்லை. மேல்முறையீடு செய்வதில் மத்திய அரசு விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: இடிந்தும் விழும் நிலையில் வீடு .. ஆட்டோவில் வாழ்க்கை நடத்தும் அவலநிலை ..கதறும் மாற்றுத்திறனாளி..!
அரசுக்கு நடைமுறை சார்ந்த பார்வை இருக்க வேண்டும். ஒரு ராணுவ வீரர் 15, 20 ஆண்டுகள் பணியாற்றுகிறார். அவருக்கு ஏதாவது ஊனம் என்றால் ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்படுகிறது. இவர்களை ஏன் உச்ச நீதிமன்றத்திற்கு இழுக்க வேண்டும்? அற்பமான மேல் முறையீடுகள் அற்பமான மேல்முறையீடுகள் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசு ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். ஆயுதப்படை உறுப்பினர்களை உச்ச நீதிமன்றத்துக்கு இழுக்க முடிவெடுப்பதற்கு முன் அதுகுறித்து நன்கு ஆராய வேண்டும்.

நிவாரணத்துக்கு எதிராக இது போன்ற மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் ராணுவத்தினரின் மன உறுதியை குறைக்க முடியாது. இவர்களைப் போன்ற பணியாளர்கள் ஏன் நீண்ட காலம் வழக்குகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது வியப்பாக உள்ளது. இதற்காக ஒரு கொள்கையை உருவாக்க நீங்கள் தயாராக இல்லை என்று சொன்னால் இதுபோன்ற மேல்முறையீடுகள் அற்பமாக தோன்றும் போதெல்லாம் நாங்கள் அதிக செலவுகளை சுமத்த தொடங்க வேண்டும்'
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
இதையும் படிங்க: முதுகலை மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு....