அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் எனக் கூறி திருப்பி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்கள் 11 பேருக்கு அமாலக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகக் கோரியுள்ளது.
இவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு சென்றது குறித்தும், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது குறித்தும் விசாரிக்க அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே இடைத்தரகர்களிடம் “டங்கி ரூட்” வழியாக பணத்தை இழந்து, தவிக்கும் இந்தியர்களுக்கு அடுத்த சோதனை வந்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் 11 பேரும் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஜலந்தரில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு நேரில் விசாரணைக்கு வர வேண்டும் எனக் கோரி சம்மன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீடுகளில் ED RAID..!
தொடக்கத்தில் அமலாக்கப்பிரிவு 15 வழக்குகளை மட்டும்தான் ஆய்வு செய்தது, ஆனால்தகவல்களைத் திரட்டும்போது, இந்த 11 பேரும் சிக்கியுள்ளனர். அமலாக்கப்பிரிவு தவிர, பஞ்சாப் போலீஸாரும் டிராவல் ஏஜென்ட்கள் மீது 15 வழக்குகளும் பதிவு செய்துள்ளது. ஆனால் பஞ்சாப் போலீஸாரிடம் இருந்து அமலாக்கப்பிரிவு தகவல்களைப் பெறவில்லை.

சட்டவிரோதமாக இந்தியர்களை “டங்கி ரூட்” எனப்படும் நெட்வொர்க் மூலம் அமெரிக்காவுக்கு இடைத்தரகர்கள் அனுப்பியுள்ளனர். இந்தியர்கள் வனப்பகுதி, ஆறு, கடல்மார்க்கம், விமானம் மூலம் மெக்சிக்கோ அழைத்துச் சென்று அங்கிருந்து அமெரி்க்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல வைத்துள்ளனர். சட்டவிரோதமாக அமெரிக்கா சென்ற இந்தியர்கள் டிராவல்ஸ் ஏஜென்ட்களிடம் ரூ.44 கோடி கொடுத்து ஏமாந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஒரு நபர் சராசரியாக ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரை கொடுத்து ஏமாந்துள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 345 இந்தியர்கள் இதுவரை நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு வந்துள்ளனர். இதில் 131 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் விமானம் கடந்த மாதம் 5ம்தேதி 104 சட்டவிரோத குடியேறிகளுடன் அமர்தசரஸ் விமானநிலையம் வந்தது, அடுத்ததாக 16ம் தேதி 116 இந்தியர்களுடனும், 3வது விமானம் 112 பேருடனும், கடைசியாக 31 பேருடனும் டெல்லி விமானநிலையம் வந்து சேர்த்தது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் டிராவல் ஏஜென்ட்களுக்கு எதிராக 3225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1100 வழக்குகள் பஞ்சாப் சட்டவிரோத ஆட்கடத்தல் சட்டத்தின் கீழ் நிலுவகையில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமீரின் வங்கி கணக்கில் இருப்பது போதை கடத்தல் பணம்: அடித்துச் சொல்லும் அமலாக்கத்துறை..!