உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாக குழுவில் இடம்பெற்றுள்ளார். எப்பொழுதும் சர்ச்சைகளில் சிக்கும் எலான் மஸ் 433.9 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரராக இருந்து வருகிறார். ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ், டெஸ்லா, நியூட்ராலிங் உள்ளிட்ட உலகின் தலை சிறந்த நிறுவனங்களை நிர்வகித்து வரும் எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில் எலான் மஸ்கின் ஹேர் ஸ்டைல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தலையின் பக்கவாட்டு பகுதிகள் மற்றும் கீழ் பகுதியில் முற்றிலுமாக ஹேர் கட் செய்து, உச்சந்தலையில் மட்டும் ஹேர் வைத்துள்ளார். எலான் மஸ்கின் இந்த புதிய ஹேர் ஸ்டைல் ஒரு வகையில் பார்ப்பதற்கு ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் ஹேர்ஸ்டைலை போல் உள்ளாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அம்மாடியோவ்! 14 வது குழந்தைக்கு அப்பாவான பிரபலம்!!
தற்போது நியூ ஹேர் லூக்கில் போஸ் கொடுக்கும் எலான் மஸ்கின் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதேநேரம் எலான் மஸ்கின் புதிய ஹேர் ஸ்டைல் தென்கொரிய அதிபர் கிம் தோற்றத்தை காட்டுவதாகவும் நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர். இந்த நிலையில் எலான் மஸ்கின் இந்த புதிய ஹேர் ஸ்டைல் பற்றிய மற்றொரு தகவலும் பகிரப்படுகிறது. அதாவது தற்போது உள்ள எலான் மஸ்கின் ஹேர் ஸ்டைல் இப்போது எடுத்தது இல்லை என்றும், இது 2021ம் ஆண்டு ஒரு கண்காட்சியில் எலான் மஸ்க் பங்கேற்க சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது.

எது எப்படியோ அடிக்கடி சர்ச்சையாகி வரும் எலான் மஸ்க் தற்போது நியூ ஹேர் ஸ்டைல் மூலம் மீண்டும் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க எலான் மஸ்கின் 13வது குழந்தையை தான் பெற்றெடுத்ததால பிரபல எழுத்தாளர் ஆஷ்லே பேசி வருகிறார். எலான் மஸ்கை இண்டர்வியூ ஒன்றில் சந்தித்ததாகவும், தனக்கும் அவருக்கும் ஆண் குழந்தை பிறந்ததாகவும் கூறி வருகிறார். தன்னுடைய குழந்தைக்கு எலான் மஸ்க் தந்தை என்று உரிமையை கோரும் ஆஷ்லே எலானை விவாதப்பொருளாக்கினார். இதற்கெல்லாம் மேல் எலான் மஸ்கிற்கு 14வது குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியும் நெட்டிசன்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரை சுற்றி இவ்வாறு பரவி வரும் செய்திகள் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: எலான் மஸ்க், காஷ் பட்டேல் இடையே லடாய்.! மண்டையை பிய்த்து கொள்ளும் ட்ரம்ப்