புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இ-பைக், ஆட்டோ, ரிக்ஷா, வாடகை வாகனங்கள் போன்றவை மூலம் சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகின்றனர். அதனைப் பயன்படுத்தி `கோ ஃபிரீ சைக்கிள்’ (Go Free Cycles) என்ற சைக்கிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் தன்னுடைய அலுவலகத்தை காமராஜர் சாலையில் பழைய ஆட்சியர் அலுவலகம் அருகில் திறந்தது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஒருவர் 4,50,000 ரூபாய் முதலீடு செய்தால் அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் தோறும் 52,250 ரூபாய் செலுத்துவதாக அறிவித்தது. அதன் பிறகு 9 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் செலுத்திய ரூ.4,50,000 லட்சத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் விளம்பரம் செய்தனர்.

அதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்த நிலையில், அதிக லாபம் கிடைக்கும் என பொதுமக்களுக்கு ஆசை காட்டி, அவர்களை முதலீடு செய்ய வைத்து இந்த நிறுவனம் முறைகேடு செய்கிறது என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார்கள் சென்றன.
அதனடிப்படையில் அந்த நிறுவனத்தை சோதனை செய்யும்படி சைபர் கிரைம் எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டார். அதையடுத்து சைபர் கிரைம் போலீஸார். கோ ஃபிரீ சைக்கிள் நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்தனர். சோதனை செய்ததில் 2.45 கோடி ரூபாய் மோல் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது. அந்த பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: ரெஸ்டாரெண்ட் போறீங்களா? உஷார்..!! பர்கரில் வேகாத கோழிக்கறி.. குழந்தைக்கு வாந்தி, மயக்கம்..!

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை வருவாய் துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை, இணைய வழி குற்றப்பிரிவு காவல் துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்காக பணம் என்னும் இயந்திரத்துடன் சென்று கட்டு கட்டாக உள்ள பணத்தை பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பணிகள் அமர்த்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பணம் என்னும் பணி நீண்ட நேரம் நடந்தது. பணம் எண்ணும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து ஐந்து பேக்களில் பணத்தை எடுத்துக்கொண்டு அமலாக்கத்துறையினர் புறப்பட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து அமலாக்க துறையின் துணை இயக்குனர் அலுவலகத்தில் இருக்கக்கூடிய ஆவணங்களை சரி பார்க்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்த ஆவணங்கள் அடிப்படையில் ஆயிரக்கணக்கான நபர்கள் இங்கு பணம் செலுத்தி இருப்பது தெரிந்தது. அதேபோல் பல்வேறு வங்கி கணக்கில் பணம் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதிகாரி அந்த வங்கி கணக்குகளை ஆய்வு செய்து முடக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். இதனால் அமலாக்கத்துறை அதிகாரி இரவு நேரத்திலும் தீவிர தொடர் சோதனை ஈடுபட்டு வருவதால் மேலும் பல கோடி ரூபாய் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 1 மணி நேரம் தான் டைம்.. கலெக்டர் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. புதுச்சேரியில் பரபரப்பு..!