×
 

100 நாள் வேலை - இப்போதைக்கு ஊதியம் இல்லை... கைவிரிக்கும் தமிழக அரசு..!

நிதியை மத்திய அரசு விடுவிப்பதில் தாமதம் செய்வதால் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிலுவையில் உள்ள  ரூ.3,300 கோடி நிதியை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடிதம்  எழுதி உள்ளார். 

நிதியை மத்திய அரசு விடுவிப்பதில் தாமதம் செய்வதால் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: இதை செய்யாமல் மும்மொழி கொள்கையை எதிர்ப்பது துரோகம்... திமுகவை டேமேஜ் ஆக்கிய டாக்டர் ராமதாஸ்.,!

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட நிதி ரூ.3,300 கோடியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், "தமிழ்நாட்டிற்கான ரூ.3,300 கோடி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்" என்று அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தி உள்ளார். "தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்த்தின் கீழ் 1.10 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளனர். 2024-25ல் 20 கோடி மனித சக்தி நாட்கள் வேலை வழங்க மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டது. 

மத்திய அரசு நிதி விடுவிப்பதில் தாமதம் செய்வதால், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஆகிறது. நிதி பெறப்பட்டதும் பணியாளர்களின் நிலுவை ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஆகிறது. நிதி பெறப்பட்டதும் பணியாளர்களின் நிலுவை ஊதியம் வங்கிக்கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான், '' 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்''. ஊரகப்பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய கூலித் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சியின் பெயர் சொல்லும் திட்டங்களில் ஒன்று. இதனை கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி நிதி ஒதுக்கி வருகிறது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share