×
 

111 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம் அகற்றம்.. ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு!

மண்டபம் - ராமேஸ்வரத் தீவை இணைக்கும் 111 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மண்டபம் - ராமேஸ்வரத் தீவை இணைக்கும் வகையில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை கடலில் ரயில் பாலம் கட்ட ஆங்கிலேயர்கள் முடிவுவ்செய்தனர். ஆனால், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதிகமாக இருந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பிறகு, நிலப்பகுதியான மண்டபத்தையும் ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில்  கடலில் ரயில் பாலம் கட்ட முடிவானது. அதே நேரத்தில் நடுவே கப்பல் கடந்து செல்ல தூக்குப் பாலம் கட்டவும் முடிவானது.  இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கும் சிறு கப்பல் போக்குவரத்து நடத்த கி.பி.1911-ல் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்தது.



பின்னர் பாலப் பணிகள் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் அப்பணிகள் நிறைவடைந்தன. பிறகு சென்னை எழும்பூரிலிருந்து தனுஷ்கோடிக்கு பாம்பன் ரயில் பாலம் வழியாக 1914 பிப்ரவரி 24இல்  முதன்முதலாக போட் மெயில் ரயில் சேவை தொடங்கியது. இதன் மூலம் சென்னை எழும்பூரிலிருந்து கொழும்பு வரையிலும் பயணிக்க முடிந்தது. 1964 தனுஷ்கோடியை புயல் அழித்த பிறகு இலங்கை வரை செல்லும் ரயில்-கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. பிறகு ராமேஸ்வரம் வரை மட்டுமே ரயில் சேவை தொடர்ந்தது. இந்த பாம்பன் ரயில் பாலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது.



இந்நிலையில் புதிய பாலம் கட்ட 2019இல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற பால கட்டுமான பணிகள் முடிந்துவிட்ட நிலையில், ரயில் இயக்க சோதனையும் முடிந்துவிட்டது. புதிய பாலத்தில் ரயில் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய பாலம் விரைவில் திறப்பு விழா காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பழைய பாலம் அப்படியே இருக்குமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பழைய பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 111 ஆண்டுகள் ஓர் அடையாளமாகத் திகழும் பாம்பன் பாலத்தின் பயணம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: சைபர் திருடர்களுக்கு இப்படியெல்லாமா உதவுவாங்க..? தமிழக போலீஸார் விசாரணையில் திடுக் தகவல்!

இதையும் படிங்க: தமிழகம் பாதுகாப்பான மாநிலம்.. பாராட்டி தள்ளிய ஆளுநர் ஆர்.என். ரவி.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share