திருப்பதியில் மூச்சு திணறி மயங்கிய சிறுவன்.. 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்ததாக அறிவிப்பு.. ..
திருமலை திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 15 வயது சிறுவன் பலியானதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகாவின் மடிகேரி தாலுக்கா ஷ்ரவணகுடியைச் சேர்ந்தவர் மல்லேஷ். தனது 15 வயது மகன் மஞ்சுநாத் உட்பட தனது குடும்பத்தினர் 12 பேருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய, கடந்த 21ம் தேதி இரவு திருமலை வந்துள்ளார். பின்னர் திருமலையில் இலவச தரிசனத்தில் சென்று சனிக்கிழமை சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன் பிறகு அன்று மாலை திருமலையில் உள்ள தரிகொண்டாவில் அமைந்துள்ள வெங்கமாம்பா அன்னதான பிரசாத மையத்தில் உள்ள 4வது கூடத்தில் குடும்பத்துடன் சாப்பிட சென்றுள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரசாத கூட மையத்தினர் சிறுது சிறுது பகுதிகளாக பக்தர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது வரிசையில் காத்திருந்த பின்னர் கேட் திறந்தவுடன் உடனடியாக கூட்டத்தில் மஞ்சுநாத் கீழே விழுந்தான். இதில் சுயநினைவை இழந்த அவரை உடனடியாக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை தேவஸ்தானத்தின் சுவிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி
மஞ்சுநாத் இன்று இறந்தார். இதுகுறித்து திருமலை இரண்டாவது நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மஞ்சுநாத் கூட்டநெரிசலில் சிக்கி இறந்ததாக தகவல் பரவியது.
இதையும் படிங்க: திருப்பதி கோயிலில் தகராறு! கொதித்தெழுந்த அறங்காவலர் குழு உறுப்பினர்..! அதிகாரத்தில் இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவியா?
இதனை மறுத்த தேவஸ்தானம், சிகிச்சை பலனின்றி இறந்த சிறுவனுக்கு ஏற்கனவே இருதய கோளாறு உள்ளது என விளக்கம் அளித்துள்ளது. சிறுவன் மஞ்நாத் நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளான். ஆறு வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்டான். அதற்காக சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத கூடத்தில் நடந்த கூட்ட நெரிசல் காரணமாக சிறுவன் இறந்ததாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. தவறான செய்திகளை, தகவல்களைப் பரப்பி பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிசிடிவி காட்சிகளையும் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதில் டைனிங் ஹால் 4 ல் உணவு பரிமாறி தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை அனுமதிக்கும் போது மஞ்சுநாத் பக்தர்களுடன் வேகமாக ஓடி சென்றுள்ளான். இதில் உடல் அசதி ஏற்பட்டு மயங்கி விழுந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. மஞ்நாத் நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். ஆறு வருடங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேகமாக ஓடி சென்றதால் திடிர் இதய பாதிப்பு ஏற்பட்டது என்றும் மஞ்சுநாத் ஓடி சென்று மயங்கிய சி.சி.கேமிரா காட்சிகளை வெளியிட்டு தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி.. உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை..!