செல்வப்பெருந்தகையின் தலைவர் பதவிக்கு ஆபத்து..? காங்கிரஸில் போர்கொடி தூக்கும் 25 மாவட்ட தலைவர்கள்..!
கடந்த 12 வருடங்களுக்கு முன்புதான் காங்கிரஸில் இணைந்தார். எனவே இவரால் காங்கிரஸ் தொண்டர்களையோ, கொள்கைகளையோ ஏற்றுக்கொண்டு செயல்பட முடியாது என அதிருப்தியை வெளிப்படுத்தினர் அக்கட்சியின் நிர்வாகிகள்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரி நீக்கப்பட்டு செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டபோதே கதர் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். விசிக கட்சியிலிருந்து, கட்சி மாறி வந்த செல்வப்பெருந்தகையை ஏன் தலைவராக நியமிக்க வேண்டும்? பாரம்பரியமான காங்கிரஸில் பல தலைமுறைகளாக கட்சியில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
18 சட்டமன்ற உறுப்பினர்களையே ஒருங்கிணைத்து செயல்பட முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் நபரால் 300-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் 78-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்களை ஒருங்கிணைத்து எப்படிச் செயல்பட முடியும். இதற்கு முன்பு தலித் தலைவர்களாக அடையாளம் காணப்பட்ட இளையபெருமாள், மரகதம் சந்திரசேகர் போன்ற தலித் ஆளுமைகளை காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர். கடந்த 12 வருடங்களுக்கு முன்புதான் காங்கிரஸில் இணைந்தார். எனவே இவரால் காங்கிரஸ் தொண்டர்களையோ, கொள்கைகளையோ ஏற்றுக்கொண்டு செயல்பட முடியாது என அதிருப்தியை வெளிப்படுத்தினர் அக்கட்சியின் நிர்வாகிகள்.
இந்நிலையில்தான், தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி மாவட்ட தலைவர்கள் 25 பேர் தனி அணியாக செயல்படுவதுடன், டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன கார்கேவிடம், செல்வப்பெருந்தகை மீது புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பின், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, 'கட்சி பணிகளில் சரியாக செயல்படாத மாவட்டத் தலைவர்களை மாற்றிவிட்டு, புதியவர்கள் நியமிக்கப்படுவர்' என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: உங்க கூட்டணி கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த சொல்லுங்க.. செல்வபெருந்தகைக்கு கடிதம் எழுதிய அன்புமணி.!
அடுத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர் பதவிகளுக்கு இணையதளம் மூலம் 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவித்தார். கட்சியில் உள்ள 72 மாவட்டத் தலைவர்களில், 25க்கும் மேற்பட்டவர்கள் செலவப்பெருந்தகையின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். செலவப் பெருந்தகைக்கு எதிராக முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி., செல்லக்குமார், ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் ஓரணியில் ஒன்று கூடினர். காங்கிரஸ் கட்சி தலைமை நடத்திய, 'வீடியோ கான்பரன்ஸ்' கூட்டங்களையும் அவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.
அவர்களை சமதானப்படுத்தும் வகையில், 'ஜனநாயகம் காக்க, விண்ணப்ப நடைமுறை அவசியம். கட்சி பணியாற்ற ஏராளமானோர் காத்திருக்கின்றனர். வேலை செய்யும் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட மாட்டார்கள்' என விளக்கமளித்து ஆசுவாசப்படுத்தினார் செல்வப்பெருந்தகை. இருப்பினும், கே.எஸ்.அழகிரி, செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் ஆதரவு மாவட்டத் தலைவர்கள், செல்வப்பெருந்தகைக்கு எதிராக திரும்பி உள்ளனர்.
சென்னையில் ஓரிரு நாட்களுக்கு முன் அவர்கள் தனியாக ஒரு கூட்டம் நடத்தி, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அதிருப்தி மாவட்ட தலைவர்கள் 25 பேர் டெல்லி சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை சந்தித்து, செல்வப்பெருந்தகை மீது புகார் அளிக்க தயாராகிருகின்றனர்.
செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸ் தலைவராகும் முன்பே கதர் கட்சி நிர்வாகிகளிடம் எதிர்ப்பு வந்துள்ளது. அவர் சட்டப்பேரவை தலைவராக இருந்த போதே அவருக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 11 பேர் டெல்லி சென்று புகார் அளித்துள்ளனர். அப்போது செல்வப்பெருந்தகைக்கு எதிராக பிரின்ஸ், ராஜேஷ்குமார், பழனி நாடார்உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அனைவரும் டெல்லிபுறப்பட்டு சென்று கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும், அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலையும் சந்தித்து, செல்வப் பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி விட்டு வந்தனர். அதன் பிறகும் அவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கியது காங்கிரஸ் தலைமை. நிலைமை இப்படி இருக்க, செல்வப்பெருந்தகை மீது மல்லிகார்ஜூனா நடவடிக்கை எடுப்பாரா? என்பது சந்தேகமே..!
இதையும் படிங்க: வாய்க்கொழுப்பு....தீர்மானிக்கும் வாக்கு இல்லை...பிஹாரில் வெல்லாதவர்...மக்களை சந்திக்கணும்...விஜய் மீது நாதக, திமுக, காங்கிரஸ், பாஜக பாய்ச்சல்