×
 

மேரேஜ் செய்ய மறுத்த காதலன்... டீ-யில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி!!

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி, முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள் என வாட்சப்பில் மெசேஜ் அனுப்பிய பகீர் சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி, முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள் என வாட்சப்பில் மெசேஜ் அனுப்பிய பகீர் சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது. 

விழுப்புரத்தை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் சட்டக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போதுதான் பிரச்சனை ஆரம்பமானது. ஜெயசூர்யாவும், அந்த பெண்ணும் அண்ணன், தங்கை முறை  என்பதை சுட்டிக்காட்டிய இருவரின் பெற்றோரும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் யோசிக்க தொடங்கிய ஜெயசூர்யா தன் மனதை மாற்றிக் கொண்டுள்ளார். 

ஆனாலும் ஜெயசூர்யாவை விடாமல் துரத்திய அந்த பெண், பெற்றோர் கூறுவதை காதில் வாங்கி கொள்ளாமல் என்னை திருமணம் செய்து கொள் என அடம்பிடித்துள்ளார். ஜெயசூர்யா மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமான பெண் தனது கையை கத்தியால் அறுத்து கொண்டுள்ளார். அதனால் பதறிய ஜெயசூர்யா அந்த பெண்ணை பார்த்து பேசி புரிய வைக்க முயன்றுள்ளார். 

இதையும் படிங்க: மூக்கின் வழியாக கொகைன் உறிஞ்சிய பெண்... கடைசியில் நடந்த ட்விஸ்ட்!!

நாளடைவில் அந்த பெண்ணின் டார்ச்சல் உச்சக்கட்டதை அடைந்துள்ளது. ஜெயசூர்யா அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார். இதனால் ஒருமுறை தன் வீட்டுக்கு வந்து போகும்படி ஜெயசூர்யாவை அழைத்துள்ளார். அவரும் அந்த பெண்ணின் பேச்சை கேட்டு சென்றுள்ளார். 
ஜெயசூர்யாவுக்கு தேநீர் கொடுத்த அந்த பெண் சிறிது நேரம் பேசியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த ஜெயசூர்யாவுக்கு தனது காதலியிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அதை படித்தபோது பேரதிர்ச்சியான ஜெயசூர்யா அந்த பெண்ணிற்கு செல்போன் அழைப்பு மூலம் உண்மையை சொல்லும்படி கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண்ணோர், என்னை திருமணம் செய்து கொள்ளாத நீ உயிருடன் இருக்க கூடாது என்பதற்காக தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்ததாகவும், முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள் என கூறியுள்ளார். 
இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயசூர்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயசூர்யாவின் சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளதால் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே மருத்துமனைக்கு சென்ற நீதிபதி நடந்ததை கேட்டு ஜெயசூர்யாவிடம் மரணம் வாக்குமூலம் பெற்றார். காதலிக்க மருத்ததால் காதலனுக்கு விஷம் வைத்த காதலி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மாஜி எம்எல்ஏவை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர்: கர்நாடகாவில் பரபரப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share