×
 

அதிமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு தாவுகிறாரா..? கோவை சத்யன் என்ன சொல்கிறார் தெரியுமா.?

எதிர்க்கட்சிகள் புரளி கிளப்பி கேள்விப்பட்டிருக்கிறேன். சொந்தக் கட்சியிலேயே புரளி கிளப்புவது அசிங்கம். என்று அதிமுக ஐ.டி. விங் தலைவர் கோவை சத்யன் காட்டம்.

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் சேரப்போவதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், அதுதொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோவை சத்யன் விளக்கம் அளித்துள்ளார்.

விசிகவிலிருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜூனா, அதிமுகவிலிருந்து விலகிய நிர்மல்குமார் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். இவர்களைப் போல கோவை சத்யனும், நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் ஆகியோர் தவெகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தவெகவில் இணைகிறேனா என்பது பற்றி கோவை சத்யன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை சத்யன் வெளியிட்டுள்ள பதிவில், "எதிர்க்கட்சி புரளி கிளப்பி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இருக்கும் கட்சியில் இருப்பவர்களே இப்படிப் புரளி கிளப்புவது அசிங்கம். சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகியதை, இன்று கட்சியில் இருந்து விலகல் என்று பொய் பரப்புவது கோழைத்தனம்.
எனக்கு வாழ்வும் அடையாளமும் அளித்த, இரட்டை இலை அதன் தலைமையே எனது வழி. என்றும் அஇஅதிமுக, என்றைக்கும் எடப்பாடியார” எனறு கோவை சத்யன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: விஜய் போட்ட கறார் கன்டிஷன்; புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share