×
 

இதெல்லாம் வெட்கமா இல்லையா? - அரசு மருத்துவமனைக்கு நடந்த அவலத்தால் கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!

இன்று அதிகாலையிலேயே அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இன்று அதிகாலையிலேயே அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அரசு மருத்துவமனைக்குள் நடந்தது என்ன? 

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் வார்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் அங்கிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர், மருத்துவமனைக்கு வேலை தேடி வந்துள்ளார். நேற்றிரவு மது அருந்திவிட்டு மருத்துவமனை வளாகத்திலேயே உறக்கியவர், அதிகாலையில் பெண்கள் வார்டிற்குள் நுழைந்து, அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 50 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை; போதை ஆசாமியை கொத்தாக தூக்கிய போலீஸ்! 

இதுதொடர்பாக உடனடியாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மது போதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த சதீஷை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

எடப்பாடி பழனிசாமி சாடல்: 

அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது” என கடுமையாக விமர்சித்துள்ளார். 

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில்… pic.twitter.com/J4TUrxGpm7

— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 13, 2025

பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய  மு.க.ஸ்டாலின், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?
#யார்_அந்த_SIR என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் திரு. ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் இதுபோன்ற "சார்"கள் காப்பாற்றப் படுவதால் தான், மேலும் பல "சார்"கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை; போதை ஆசாமியை கொத்தாக தூக்கிய போலீஸ்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share