×
 

எடப்பாடியார் இல்லாத அதிமுக… பாஜக போடும் பகீர் திட்டம்… அடுத்த பொதுச்செயலாளர் யார்..?

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் சேரவே மாட்டேன் என மறுத்தும் விட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தற்போது எட்டு பக்கமும் இருந்து அவருக்கு நெருக்கடி வந்து கொண்டு இருக்கிறது. 

‘‘நாட்டை ஆளும் பிரதமரே எங்களது  தலைவர் எடப்பாடி பழனிசாமியை அருகில் நிற்க வைத்து அழகு பார்க்கிறாரே..'' என ரத்தத்தின் ரத்தங்கள் ஒரு காலத்தில் கைதட்டி மகிழ்ந்தார்கள். ஆனால், அப்படிப்பட்ட நாட்டை ஆளும் தலைவரையே தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டவர் எங்களது தலைவர். இவ்வளவு தைரியம் எங்கள் தலைவரை விட்டால் வேறு யாருக்கும் கிடையாது'' என நெஞ்சை நிமித்தினார்கள்.அதை நிரூபிக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் சேரவே மாட்டேன் என மறுத்தும் விட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தற்போது எட்டு பக்கமும் இருந்து அவருக்கு நெருக்கடி வந்து கொண்டு இருக்கிறது.

 

எங்களை கூட்டணியில் சேருங்கள் என நூல்விடும் கட்சியை கேள்விப்பட்டிருப்போம். நாட்டையே ஆண்ட போதும் எங்களை அதிமுகவோடு கூட்டணி சேர்த்துக் கொள்ள வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகிறது பாஜக. அக்கட்சியில் இருந்து கொடுக்கும் நெருக்கடியை எடப்பாடி பழனிசாமியால் தாங்கொ கொள்ள முடியவில்லை.இதனால் அவரது பிடியும் தளர்ந்து கொண்டே வருகிறது என்கிறார்கள். 

இதையும் படிங்க: தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது... திமுக கூட்டணி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..!

எடப்பாடி பழனிசாமியின்  உறவினர் வீட்டில் நடந்த திடீர் சோதனைக்கு பிறகு அவர் கொஞ்சம் ஆடிப்போய்த்தான் இருக்கிறாராம்.டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி குறித்து கூறும்போது, ''மக்கள் அவர்களை விரும்புகிறார்கள்'' என்று சொன்னார் எடப்பாடி பழனிசாமி.வழக்கமாக வேறு கட்சியை பற்றி பதில் சொல்ல மாட்டேன் என கூறும் எடப்பாடி பழனிசாமி 'மக்கள் விரும்புகிறார்கள்' என கூறியதை வைத்தே வலையில் வசமாக சிக்கிகிட்டார் என்பதை அதிமுக மூத்த நிர்வாகிகள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

 

ஆகையால், எடப்பாடி பழனிசாமி, எந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என சொன்னாரோ, அந்த கட்சியுடன் நெருங்கி வருகிறார் என்கிறார்கள். ஆனால், அதிகாரத்தை கையில் எடுத்துள்ள டெல்லி, இப்போதைய எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவை கொண்டு வரவேண்டும் என்பதில் குறியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.இதற்கான வேலையில் இறங்கியிருக்கும் நிலையில், இனி அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆங்காங்கே கொடி பிடிக்க இருப்பதாகவும், இதனால் ஓ.பி.எஸும் ரொம்பவே மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்.

கூட்டணியில் சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியுடன் சண்டையே போட்டிருக்கிறேன். கரை வேட்டிகூட கட்டமுடியாத நிலையில் இருக்கும் என்னைத்தான் மேலே கொண்டு வருவார்கள் என நினைக்கிறார் ஓ.பி.எஸ். ஆனால் அவர் நல்லவர் தான், வல்லவர் இல்லை என்ற கருத்தை கொண்டுள்ள பாஜக தலைமை சசிகலாவை தலைமைக்கு கொண்டு வர திட்டம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா காலத்தில் இருந்த மூத்த தலைவர்கள் எல்லோரையும் முன்பு கைக்குள் வைத்திருந்தவர் சசிகலா. எனவே அவருக்கு இன்னமும் பல சீனியர்கள் விசுவாசமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.இந்த தகவலை அறிந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குத்தித்து வருவதாக சொல்கிறார்கள். 
 

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த தலைவலி... அதிமுக ஒன்றிய செயலாளரால் பரபரப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share