திண்டுக்கல்லில் மற்றொரு ரயில் சைக்கோ..! போதையில் அட்ராசிட்டி..!
மற்றும் ஒரு ரயில் சைக்கோ..! போதையில் அட்ராசிட்டி..இது திண்டுக்கல்லில்..
தமிழகத்தில் ஒரே வாரத்திற்குள் இரண்டு வெவ்வேறு இடங்களில் பெண்களை குறி வைத்து சைக்கோ தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் ரயில் பெட்டிகளில் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் தனி காம்பார்ட்மென்ட்களில் ஏறி பாலியல் தொல்லை கொடுப்பது அதிகரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்த ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ரயிலில் பெண்கள் பெட்டியில் அமர்ந்து பயணித்து வந்தார். ரயில் ஜோலார்பேட்டை சந்திப்பில் நின்ற போது ஹேமராஜ் என்னும் சைக்கோ நபர் அந்த பெட்டியில் ஏறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். அந்தப் பெண்ணை துன்புறுத்தி கீழே தள்ளி உள்ளான்.
பின்னர் அந்த பெண் காப்பாற்றப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது தான் 4 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரிய வந்தது. இதில் கொடூரமான விஷயம் என்னவென்றால் உடல் ரீதியாக மனரீதியாக அந்த பெண் பாதிக்கப்பட்டது ஒரு புறம் இருக்க வயிற்றில் சுமந்திருந்த கருவையும் தற்போது அவர் இழந்துள்ளார் என்ற அதிர்ச்சி செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது.
இதையும் படிங்க: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது.. வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.!
கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிய அந்த சைக்கோ நபர் கே வி குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் ஆவான். தற்போது அவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இவ்வாறு ஒரு சோக சம்பவம் நடைபெற்று தொடர்ந்து பரபரப்பு நீங்காத நிலையில் மற்றுமொரு ரயில் சைக்கோ சம்பவம் நடைபெற்று உள்ளது. திண்டுக்கல் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடியில் இருந்து ஈரோடு செல்லும் ரயிலில் தனியாக பயணித்து வந்த 26 வயது இளம்பெண் ஒருவர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்.
போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வந்த அந்த பெண் தேர்வு தொடர்பாக ஈரோடு சென்று இருக்கிறார். அப்போது கொடைரோடு அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அந்த பெண்ணுக்கு சதீஷ்குமார் என்ற மற்றொரு சைக்கோ கொடூரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இது குறித்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மதுபோதையில் இருந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற சைக்கோ நபரை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்தடுத்து ரயிலில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் தொடர்பான பிரச்சனைகள் எழுந்துள்ளதால் ரயில்வே போலீசார் பெண்கள் பெட்டிகளுக்கான பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு இனி கவலை கிடையாது..சூப்பர் ஆப் வருகிறது.!