அவுரங்கசீப்பே தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை… வடக்கனுக்கு வாய்ப்பு கிடைத்து விடுமா? மார்தட்டும் தங்கம் தென்னரசு..!
'எம்பரர் ஆஃப் யுனிவர்ஸ்' 'ஆலம்கீர்' என்று தன்னை அழைத்துக்கொண்ட அவுரங்கசீப்பால்கூட, தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை.
''சத்ரபதி சிவாஜியாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மார்தட்டி பேசியதை ஆர்ப்பரித்துக் கொண்டாடினார்கள் திமுக எம்.எல்.ஏ-க்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய பதிலுரையில், " மும்மொழி கொள்கையை ஏற்காததால் கல்வி நிதி, 100 நாள் வேலை திட்ட நிதி என எதையும் தமிழ்நாட்டுக்கு தர மறுக்கிறது ஒன்றிய அரசு. அவர்கள் 2000 கோடி ரூபாய் அல்ல பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் திராவிட கொள்கையை இழக்க மாட்டோம் என முதல்வர் உறுதியாக உள்ளாா்.
வடக்கே இருந்து வரும் ஆதிக்கத்திற்கு எந்த காலத்திலும் தமிழ்நாடு தலைவணங்கதில்லை'' எனப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அதற்கு வரலாற்று சான்றுகளாக அசோக சக்கரவர்த்தியின் ஆட்சி, கனிஷ்கர் ஆட்சி, அவுரங்கசீப் ஆட்சி, சத்ரபதி சிவாஜி ஆட்சி என உதராரணம் காட்டிப் பேசியபோது சட்டமன்ற அவையே ஆராவரம் செய்தது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரே மு.க.ஸ்டாலினிடம்தான் 'REVIEW' கேட்பார்- தங்கம் தென்னரசு தடாலடி..!
''வடக்கே இருந்து வரக்கூடிய எந்தவொரு ஆதிக்கத்திற்கும், வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் தமிழ்நாடு தலைவணங்கியதில்லை. அலெக்ஸாண்டரின் வெற்றிப்பாதையில் தமிழ்நாடு ஒருபோதும் இருந்ததில்லை. மௌரிய பேரசரர் சந்திரகுப்த மௌரியரால் தமிழ்நாட்டின் எல்லையை தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. அசோக சக்கரவர்த்தியின் ஆட்சி சக்கரம் தமிழ் நிலப்பரப்பில் சுழல முடியவில்லை.
புத்தர்களின் காலம் சமுத்துர குப்தனின் காலடி இந்த தமிழ் மண்ணில் கடைசிவரை பதியவில்லை. கனிஷ்கர் ஆட்சி எல்லை என்பது விந்தியத்திற்கே தெற்கே தாண்டியதில்லை. அக்பர் பாதுஷாவின் ராஜ்ஜியம் தமிழ்நாட்டை எட்ட முடியவில்லை. 'எம்பரர் ஆஃப் யுனிவர்ஸ்' 'ஆலம்கீர்' என்று தன்னை அழைத்துக்கொண்ட அவுரங்கசீப்பால்கூட, தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை.
அவுரங்கசீப்பால் 'மலை எலி' என அழைக்கப்பட்ட மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை. இந்த வரலாறு தமிழ்மண்ணுக்கு மட்டுமே உரித்தான வரலாறு'' என தங்கம் தென்னரசு பெருமித உரையாற்றியபோது திமுக எம்.எல்.ஏ-க்களும், கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் மேசையை தட்டி கொண்டாட்டத்தோடு வரவேற்றார்கள்.
இதையும் படிங்க: பொசுக்கென சிரித்த வானதி ஸ்ரீனிவாசன்... டைமிங்கில் அடித்த தங்கம் தென்னரசு... சட்டப்பேரவையில் “கலகல”