×
 

முதலமைச்சர், அமைச்சர் படம் எங்கே? திமுக, அதிமுக நிர்வாகிகள் மோதல்.. பூமி பூஜையில் கைகலப்பு..!

தருமபுரியில் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அதிமுக, திமுக நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் தலைமையிலான அரசு நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் சமயத்தில் திமுக அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், இலவச சைக்கிள் திட்டம் போன்றவை திமுக ஆட்சியில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர். அடுத்தாண்டு சட்ட்சபை தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் தலைவர்களில் வார்த்தை யுத்தம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கவுன்சிலர்கள் உள்ள தொகுதிகளை திமுக அரசு புறக்கணிப்பதாகவும் எதிர்ப்பு குரல்கள் எழுகின்றன. அதிமுக எம்.எல்.ஏக்கள் தொகுதியில் நடைபெறும் விழாக்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களின் படங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் திமுக நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவியரிம் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக அரசும் நிதி ஒதிக்கியது. இதன்படி நபார்டு நிதியுதவியில் 1கோடியே 41 லட்சம் செலவில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டுவதற்கற்கான பூஜை பூஜை இன்று நடந்தது.

இதையும் படிங்க: 71% அதிகம் சொத்து சேர்த்த கோவை எம்எல்ஏ..! பதறி அடித்து ஓடிய எஸ்.பி வேலுமணி, செங்கோட்டையன்

இந்நிலையில் அந்த தொகுதியின் எம்எல்ஏ அன்பழகன் தலைமையில் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெறும் என  அதிமுகவினர் பேனர் வைத்தனர். பூமி பூஜை நிகழ்ச்சிக்கு ஏரளாமனா அதிமுகவினரும் வந்திருந்தனர். அதே சமயம், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் திமுகவை சேர்ந்த முரளி மற்றும் திமுக நிர்வாகிகள் அங்கு வந்து பிரச்னை செய்தனர். தமிழக அரசு நிதி மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு எதிர்கட்சியினர் எப்படி வரலாம் என்றும் பேனரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம், துறை சார்ந்த அமைச்சர் படம் வைக்காமல் புறக்கணித்ததாகவும் கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால், இரு கட்சியினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

பாதுகாப்பிற்காக அங்கு வந்திருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். போலீசாரின் சமாதனத்தை இரு தரப்பினரும் ஏற்றனர். எம்.எல்.ஏ அன்பழகனும், திமுக பேருராட்சி தலைவர் முரளியும் சேர்ந்தே பூமிபூஜை செய்யலாம். இதனால் மக்களுக்கும் நன்மை. இருதரப்பு கட்சிகளுக்கும் சமாதானம் ஏற்படும் என போலீசார் எடுத்துக்கூறீனர். போலீசாரின் யோசனையை இருகட்சி நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து எம்எல்ஏ அன்பழகனும், பேரூராட்சி தலைவர் முரளியும் இணைந்து பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க: 82 மாவட்டங்களுக்கு அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்… பட்டியலில் விடுபட்ட செங்கோட்டையன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share