×
 

பிடிஆர்-ஐ புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை புகழ்ந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நிதியமைச்சர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அவரும் இரண்டு ஆண்டுகள் நிதியமைச்சராக சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால் திடீரென உட்கட்சி விவகாரத்தில் அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு மாற்றப்பட்டார். அப்போது முதல், பிடிஆர் கட்சியில் ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் அவர் மீது ஒருமாற்றுக் குறைவான அபிப்ராயம் வைத்துள்ளதாகவும் எதிர்கட்சிகள் விமர்சித்து வந்தன. 

இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை புகழ்ந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காரணம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்..

இதையும் படிங்க: இங்க திமுக ஜெயிக்க இந்த ஒன்ன மட்டும் செஞ்சே ஆகனும்... உ.பி.க்களை அதிரவிட்ட பிடிஆர்...!

மும்மொழிக் கொள்கை விவகாரம் தான் தமிழ்நாட்டின் தற்போதைய ஹாட் டாபிக். அதனை அமல்படுத்தினால் தான் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியான ரூ.2,400 கோடியை தருவோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய பேச்சு, ஆளுங்கட்சிக்கு சாதகமாக போய்விட்டது. அப்போது முதல் முதலமைச்சர் முதல் கடைகோடி திமுக தொண்டன் வரை மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும், இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாகவும் பேசியும் - எழுதியும் வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில் பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி நெறியாளர் கரண் தப்பார், தன்னுடைய விவாத நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் பிடிஆர்-ஐ பங்கேற்கச் செய்தார். அப்போது எதற்காக தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறது, மூன்று மொழிகளைப் படித்தால் மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள் தானே? அதற்கு ஏன் தடையாக இருக்கிறர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதில் தான் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. 

அவர் என்ன பதில் கூறினார் என்றால், நான் இதற்கு பதில் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், உத்தரப்பிரதேசத்தில் எவ்வளவு மாணவர்கள் மூன்று மொழி கற்றுள்ளனர், பீகாரில் எத்தனைக் குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள குழந்தைகளில் எத்தனைப் பேருக்கு இரண்டு மொழிகளாவது தெரியும், நீங்கள் கூறுவது போல் மும்மொழிக் கொள்கை தான் சிறந்தது என்றால் நாடு விடுதலை பெற்ற இந்த 75 ஆண்டுகளில் அதன்மூலம் கிடைத்த பலன் என்ன? இரண்டு மொழிகளைக் கற்றதால் பெற்ற பலன்களை விட 3 மொழிகளை கற்றதால் கிடைத்த பலன்கள் என்ன என்ற பட்டியல் இருக்கிறதா? நீங்கள் கூறுவதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? வரலாற்றின்படியும், கலாச்சாரத்தின்படியும், பொருளாதாரத்தின்படியும் எங்கள் குழந்தைகள் இரண்டு மொழிகளை படித்ததால் வாழ்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். மும்மொழிக் கொள்கையை பின்பற்றும் ஏதேனும் ஒரு மாநிலத்தை ஒப்பிட்டுக் கூறுங்கள், அவர்கள் தமிழ்நாட்டை விட சிறப்பாக உள்ளனர் என்று.. யாரோ ஒருசிலரின் தேவைக்காக நாங்கள் ஏன் எங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்... 

பிடிஆரின் இந்த வீடியோ ட்ரெண்டான நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் அதனை பகிர்ந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில் இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் நிலையில், ஏகாதிபத்திய மனோபாவம் கொண்ட சிலரது வசதிக்காக தமிழ்நாட்டின் மீது மொழிக் திணிப்பு ஏன்" என்று பதிவிட்டுள்ளார். 

ஒரேகல்லில் இரண்டு மாங்காய் என்பது போல மும்மொழிக் கொள்கை குறித்தும் கருத்து தெரிவித்தாகி விட்டது, பிடிஆர் திமுகவில் ஒதுக்கப்படவில்லை என்றும் விளக்கியாகி விட்டது என்று முதலமைச்சரின் பதிவை சுட்டிக்காட்டி வியக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
 

இதையும் படிங்க: எப்படிப்பா உங்கப்பன உறிச்சி வச்ச மாதிரி ஆட்சி செய்கிறாய்..? என ஸ்டாலினிடம் கேட்டேன்.! சைதாப்பேட்டையில் துரைமுருகன் அதிர்ச்சி பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share