×
 

பவுலிங்கில் அசத்திய குஜராத்... 105 ரன்களில் சுருண்ட உபி வாரியர்ஸ் அணி..!

மகளிர் பிரிமியர் லீக் ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது.

மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர் கடந்த மாதம் 14ம் தேதி வதோதராவில் தொடங்கியது. முதல் கட்ட லீக் ஆட்டங்கள் வதோதராவிலும், 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூருவிலும் நடைப்பெற்றன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டம் லக்னோவில் நடைப்பெற்றது.

இந்த ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக பெத் மூனி- தயாளன் ஹேமலதா களமிறங்கினர். ஆனால், தயாளன் ஹேமலதா 2 ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்... இன அழிப்பு தடுக்கப்படுமா?

இதனையடுத்து மூனி - ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து அணிக்கு வலுச்சேர்த்தனர். மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்களை குவித்து அசத்தினார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. 

பின்னர், 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உபி வாரியர்ஸ் அணி களமிறங்கியது. ஆனால், குஜராத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் உபி வாரியர்ஸ் அணி 17.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் 81 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிப்பெற்றது.

இதையும் படிங்க: ரமலான் நோன்பு தொடங்கிய விசிக தலைவர்... 21ஆவது ஆண்டாக திருமாவளவன் நோன்பு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share