இறந்த மனைவியுடன் வாழும் கணவர்... இப்படியும் ஒரு காதலா..?
ராணிப்பேட்டையில் தனது மனைவி மீது கொண்ட பேரன்பின் காரணமாக கணவர், உயிரிழந்த மனைவிக்குச் சமாதியுடன் கூடிய அழகிய வீடு கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட கான்கிரட் தொழிலாளரான பழனி. இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது அத்தை மகள் செல்வி என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு உடல்நிலை குறைவால் செல்வி மனைவி இறந்துள்ளார்.
மனைவியின் உடலை தனது சொந்த இடத்தில் அடக்கம் செய்த பழனி மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் இருந்துள்ளார். வாழும்போது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என செல்வி ஆசைப்பட்டுள்ளார். அதனால் மனைவி சமாதியை வீடாக கட்டியுள்ளார் பழனி. வீட்டின் உள்ளே இறந்த மனைவிக்கென ஒரு இடம் ஒதுக்கி சமாதியுடன் படுக்கையறை போல் வடிவமைத்துள்ளார். தனது மனைவியின் சமாதி குளுமையாக இருக்க ஏசியும் போட்டுள்ளார்.
இதையும் படிங்க: கடும் வறுமை... கரண்ட் பில் கட்ட கூட காசு இல்லை...! உருக்கமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்..!
மனைவியின் மீதுள்ள அதீத அன்பால் சமாதியையே வீடாக மாற்றி அதில் மனைவியின் நினைவுகளுடன் வசித்து வரும் பழனி, தன் மனைவி உடல் மட்டுமே இல்லையே தவிர, அவர் தன்னுடன் நினைவுகளில் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். பழனியின் வீட்டை பார்வையிட யார் வந்தாலும் ஹாலில் நின்று பேச வேண்டும் என்று கூறும் பழனி, அப்போதுதான் மற்றவர்கள் பேசும் சத்தம் அவரது மனைவிக்குக் கேட்கும் என்கிறார்.
30 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் அன் மீது அன்பாகவும் அகக்றையாகவும் செல்வி வாழ்ந்ததாகவும் பழனி கூறியுள்ளார். தினமும் மனைவியின் சமாதியை மலர்களால் அலங்கரித்து வரும் பழனியின் காதல் பிறருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்! இமெயிலில் வந்த அச்சுறுத்தல்.. கலவரமான ஆசிரியர்கள்..