×
 

திவ்யா சத்யராஜுக்கு திமுக காட்டிய திவ்ய தரிசனம்... கட்சியில் இணைந்த ஒரே மாதத்திற்குள் முக்கியப் பதவி..!

பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் கூட. அரசியல், சமூக விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளராக‌ நடிகர் சத்யராஜ்  மகள் திவ்யா சத்யராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்தியராஜுக்கு தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவர் திராவிட கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். இவர் மேடைகள் தோறும் பெரியார் கருத்துகளை முழங்கி வருகிறார். நடிகர் சத்யராஜுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், திவ்யா என்ற மகளும், சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர். மகன் சிபிராஜ் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

இதையும் படிங்க: திமுகவுக்குள் வந்த நடிகர் சத்யராஜ் மகள்... பிரபலங்களுக்கு குறி வைக்கும் திமுக!

அவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். மகள் திவ்யா சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். அவர் பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் கூட. அரசியல், சமூக விஷயங்களில் ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில், நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, கடந்த 19ம் தேதி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

திமுகவின் கட்சி கொடியான கருப்பு-சிவப்பை பிரதிபலிக்கும் வகையில் கருப்பு-சிவப்பு நிற சேலை அணிந்து அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், கட்சியில் சேர்ந்த 1 மாதத்திற்குள் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவிற்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். 

இதனை அடுத்து திமுக தகவல் அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் திவ்யா சத்யராஜ். 

இதையும் படிங்க: பட்டாசு கிளப்பும் திமுகவினர்..! அண்ணா அறிவாலயத்தில் களைகட்டியது கொண்டாட்டம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share