×
 

பெங்களூருவில் என்ன செஞ்சீங்க..? அண்ணாமலையின் ஃப்ளாஷ்பேக்: பொடி வைத்து பேசிய டி.கே.சி

டி.கே.சிவகுமார் தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பேசியதை விட, அண்ணாமலை குறித்து இப்படி பேசியது பரபரப்பாக பேசப்படுகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக பாஜக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தியது. இதற்கு கருத்துத் தெரிவித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், ''அண்ணாமலைக்கு நாங்கள் யார், எங்களின் பலம் என்னவென்று நன்றாகத் தெரியும்'' என சூசகமாகத் தெரிவித்தார். டி.கே.சிவகுமார் தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பேசியதை விட, அண்ணாமலை குறித்து இப்படி பேசியது பரபரப்பாக பேசப்படுகிறது.

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்று வரும் ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ கூட்டத்தில் கலந்து கொண்டார் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார். இதில் பேசிய அவர், ''1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை விட சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்வதை எதிர்க்கிறோ. நாட்டின் நலனுக்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: குடிநீரை கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார்..! அதிரடியை ஆரம்பித்தார் அண்ணாமலை.. பாஜக நாளை கருப்புகொடி போராட்டம்..!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டிய 'நியாயமான எல்லை நிர்ணயம்' குறித்த முதல் கூட்டு நடவடிக்கைக் குழு  மக்கள் தொகை மேலாண்மை காரணமாக தென் மாநிலங்கள் வட மாநிலங்களை விட குறைவான நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டதாக இருக்கக்கூடிய எல்லை நிர்ணயப் பயிற்சியை எதிர்ப்பதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும்.

தொகுதி மறு வரையறை விவகாரத்தில், முதல் அடியை எடுத்து வைத்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். இன்று கூடும் அனைவரும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க உள்ளோம். நமது தொகுதிகள் குறைக்கப்படுவதை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம். ஒற்றுமையாய் இருந்து நமது தொகுதிகள் எதுவும் குறைக்கப்படாமல் பாதுகாப்போம். நாங்கள் அனைவரும் நாட்டின் நலனுக்காக ஒன்றிணைகிறோம். எங்கள் சுயலாபத்துக்காக அல்ல.

எங்கள் மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை செலுத்துகின்றன. அப்படியிருக்க மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து கல்வி வளர்ச்சி, மக்கள் தொகை கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி என பங்களிப்பு செய்யும் மாநிலங்களைப் பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கட்டவிழ்க்க முயற்சிக்கிறது. நாங்கள் ஒருபோதும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். எங்கள் மாநிலங்களின் தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்'' என்றார்.


 
முன்னதாக சென்னை வான நிலையத்திக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தெலுங்கானா, பஞ்சாப், கேரளாவைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் இங்கு இணைந்துள்ளோம். என்ன விலை கொடுத்தும் நம் நாட்டையும் நமது இடங்களையும் நாம் வீழ்த்த முடியாது. நாம் மிகவும் முற்போக்கான நாடு. பொருளாதார ரீதியாகவும், கல்வியறிவிலும் நாம் வேகமாக நிற்கிறோம். நாங்கள் ஒற்றுமையாக நிற்போம், எங்கள் இருக்கைகள் எதுவும் குறையாமல் பார்த்துக் கொள்வோம். 

தமிழ்நாடு பாஜகவின் கருப்புக் கொடி போராட்டம் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், ''தமிழக பாஜகவின் கருப்புக் கொடி போராட்டத்தை நான் வரவேற்கிறேன். அவர்கள் என்னை திகார் சிறைக்கு அனுப்பினாலும் நான் பயப்பட மாட்டேன். இந்த ஆபிஸர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் பணியாற்றியவர். அவருக்கு நாங்கள் யார், எங்களின் பலம் என்னவென்று நன்றாகத் தெரியும். அவர் அவரது வேலையைப் பார்க்கட்டும் விடுங்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகையின் இடுப்பை கிள்ளிய விஜய்.. அண்ணாமலையின் விமர்சனத்துக்கு சீமான் கொடுத்த ரியாக்சன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share