×
 

அரசியலில் தோற்றுப் போனவர் எடப்பாடி பழனிச்சாமி - ஆவேசமான ஐ.பெரியசாமி...!

அரசியலில் தோற்றுப் போனவர் எடப்பாடி பழனிச்சாமி என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சாடியுள்ளார். 

அரசியலில் தோற்றுப் போனவர் எடப்பாடி பழனிச்சாமி என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சாடியுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அழகர் நாயக்கன்பட்டியில் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் செலவில் புதிய சமுதாய கூடம் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று சமுதாயக்கூடம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, அரசியலில் தோற்றுப் போனவர் எடப்பாடி பழனிச்சாமி . திராவிட மாடல் அரசின் சாதனைகளை குறை சொல்வதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என கடுமையாக விமர்சித்தார். 

இதையும் படிங்க: விஜய்க்கு அந்த அளவுக்கு சீன் இல்ல.... தெறிக்க விட்ட திமுக அமைச்சர் ஐ பெரியசாமி ...!

தமிழக அரசின் சாதனைகளை சொல்ல வேண்டுமானால் ஒரு நாள் போதாது இந்தியாவிலுள்ள அனைத்து முதல்வர்களும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் தமிழ்நாட்டினை முதல்வர்  வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் .

அம்பேத்கர் அவர்களால் வரையறுக்கப்பட்ட மாநில மொழிக் கொள்கையை ஒன்றிய அரசு சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நினைத்தால், அதனை எதிர்கொள்ள தமிழக மக்கள் ஆதரவுடன் எதற்கும் தயாராக உள்ளோம். எந்த வழக்குகளையும் சந்திக்கவும் தயாராக உள்ளோம் என சவால் விடுத்தார்.

மேலும் தமிழக முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கையால் 80 இதய நோயாளிகளுக்கு பல லட்சம் மதிப்பிலான பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பலரது உயிரைக் காப்பாற்றி உள்ளது நமது திராவிட மாடல் அரசு அதே நேரத்தில் தமிழ் மொழிக்காக பலரது உயிரையும் தியாகம் செய்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் இந்த இயக்கத்தை வழிநடத்தும் தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார். 


 

இதையும் படிங்க: நீங்க 2001இல்தான் எம்.எல்.ஏ... நான் 1989இலேயே எம்.எல்.ஏ.. ஓபிஎஸ் சொந்த ஊரில் மாஸ் காட்டிய இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share