சீமான் தாண்டவத்தை பார்க்கணுமா..? திமுகவுக்கு ஆறே மாதம்தான்: நாதக கொடுக்கப்போகும் அதிர்ச்சி..!
61 இடங்களில் 2021 தேர்தலில் வெற்றி- தோல்வியை தீர்மானித்தது நாம் தமிழர் கட்சி. 35 இடங்களுக்கு மேலாக எடப்பாடி பழனிச்சாமி பின்னடைந்து ஐயா ஸ்டாலின் 300, 400, 500 ஓட்டுகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக காரணம் நாம் தமிழர் கட்சி.
''சிவதாண்டவத்தை பார்த்தவர்கள் எல்லாம் வரும் தேர்தலில் சீமான் தாண்டவத்தை பார்ப்பீர்கள். வீரனை எதிர்க்க அரிவாளை கொண்டுவா என்றால் அவதூறுகளை கொண்டு வருகிறீர்களே'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமன் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சிிழாவில் பேசிய அவர், ''எதுக்கு இவ்வளவு பேர் சேர்ந்து கத்துகிறார்கள்... ஒரே வார்த்தை முடிஞ்சு போச்சு. ''ஸ்டாலின் தான் வராரு... விடியில் தரப்போறாரு... இதுதான் மக்களிடம் முடிவு..' இப்ப மக்களோட முடிவு முடிச்சுடனும். நீ என்ன கூத்து வேணாலும் போடு. ஓட்டு ஐயாயிரம்கூட கொடு. ஒன்னும் செய்ய முடியாது தெரியுமா?
இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு.. திமுக வசமாக சிக்கிக் கொண்டுவிட்டது.. குஷியில் பாஜக..!!
என்னை நம்ப மாட்டீர்கள். அவர்கள் இப்போது இருக்கிற இடம், பதவி நாம் கொடுத்தது. நீங்கள் நம்ப மாட்டீர்கள் 61 இடங்களில் 2021 தேர்தலில் வெற்றி- தோல்வியை தீர்மானித்தது நாம் தமிழர் கட்சி. 35 இடங்களுக்கு மேலாக எடப்பாடி பழனிச்சாமி பின்னடைந்து ஐயா ஸ்டாலின் 300, 400, 500 ஓட்டுகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக காரணம் நாம் தமிழர் கட்சி.
திமுகவினர் 500 ஓட்டில் வெற்றி பெற்றால் நாம் தமிழர் 15,000 வாக்குகள் வைத்திருக்கிறோம். 250 ஓட்டில் ஸ்டாலின் வெற்றிபெற்றால் 22,000 வாக்குகள் வைத்திருக்கிறோம். நாம் இல்லை என்றால் ஸ்டாலின் காலியாக இருப்பார். எடப்பாடி பழனிச்சாமி வந்திருப்பார். இந்தத் தேர்தலில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார். அப்போதும் சொல்கிறேன் இப்போது சொல்கிறேன் சிவதாண்டவத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சீமான் தாண்டவத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இன்னும் ஒரு ஆறு மாதம் பொறுத்திருந்து பார். வீரனை எதிர்க்க அரிவாளை கொண்டுவா என்றால் அவதூறுகளை கொண்டு வருகிறீர்களே'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எச்சை சோறுன்னு பேசிட்டு இப்போ மன்னிப்பா சிவாஜி.கி.மூ..? ஆத்திரம் அடங்காத இஸ்லாமியர்கள்