9வது மாடியில் இருந்து குதித்த ஆசிரியை... காரணத்தை கேட்ட போலீஸ்க்கு அதிர்ச்சி!!
சென்னையில் 9வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மந்தைவெளி, திருவேங்கடம் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மாளவிகா என்ற பெண் வசித்து வந்தார். இவர் அபிராமபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 38 வயதான மாளவிகாவுக்கு திருமணம் ஆகாமல் இருந்துள்ளார். அவரது பெற்றோர் வரன் தேடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணத்துக்கு விருப்பம் இல்லை என மாளவிகா தரப்பில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தனது பெற்றோர் வரன் தேடுவதற்கும் மாளவிகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோருக்கும் ஆசிரியைக்கும் இடியே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நில்லையில் தான் விபரீத முடிவை மாளவிக்கா எடுத்துள்ளார். இன்று வழக்கம் போல் நடைப்பயிற்சி எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்ற மாளவிகா அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பேருந்து ஓட்டுநருடன் தகாத உறவில் கல்லூரி மாணவி: கட்டிப்பிடித்தபடி துள்ளத் துடிக்க சாவு..!
அடுக்குமாடி குடியிருப்பின் 9வது மாடிக்கு சென்ற மாளவிக்கா அங்கிருந்து கீழே குதித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கு சென்னை ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஆசிரியை பரிசோதித்த மருத்துவர்கள் துரதிர்ஷ்டவசமாக வரும் வழியிலேயே மாளவிகா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த மைலாப்பூர் போலீசார் ஆசிரியை இறப்பு காரணம் என்ன, அவருக்கு வேறேதேனும் பிரச்சனைகள் இருந்ததா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடன் தொல்லையால் விபரீதம்.. 2 பிள்ளைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை.. சென்னையில் சோகம்..!