சத்தியமே வெல்லவில்லை... ஆத்திரப்பட்ட பிரேமலதா... அடுத்த நொடியோ போன் போட்ட எடப்பாடியார்..!
இந்த பின்னணியில்தான் அதிமுகவை விமர்சிக்க வேண்டாம் என பிரேமலதாவிடம் இருந்து அவசர உத்தரவு பறந்தது.
நேற்று சேலம் மாவட்டம், ஆத்தூரில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் பலர் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உற்சாகமாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் அளிக்கப்படுமா என்ற கேட்கப்பட்டது. ‘அப்படி என்று யார் சொன்னது? எங்களது தேர்தல் உடன் படிக்கையை பார்த்தீர்களா? யாராவது சொன்னார்கள் என்று கேட்காதீர்கள்’ என்று காட்டமாக பதில் கூறினார் எடப்பாடி.
ஓரிரு வாரங்களுக்கு முன்புதான் அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும். இது ஏற்கனவே எடுத்த முடிவுதான்… யார் எம்.பி என்பதை விரைவில் அறிவிப்போம் என பிரேமலதா தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ராஜ்யசபா சீட் கொடுக்க மறுத்த எடப்பாடியார்..! நான்கே வார்த்தையில் பிரேமலதா பதிலடி..!
இந்த சூழலில் எடப்பாடியின் இந்த கருத்து தேமுதிகவை அப்செட் ஆக்கியது. உடனடியாக கேப்டன் விஜயகாந்த் என்ற சமூக தள பக்கத்தில், ''சத்தியமே வெல்லும்... நாளை நமதே'' என பதிவு செய்யப்பட்டது. விரக்தியான தேமுதிக நிர்வாகிகள் சிலர் அதிமுகவை கண்டித்து பதிவுகள் போட ஆரம்பித்தனர்.
திடீரென சில 18 நிமிடங்களில் கேப்டன் விஜயகாந்த் சமூக தள பக்கத்தில் இருந்த அந்த பதிவு நீக்கப்பட்டது. தேமுதிக நிர்வாகிகள் யாரும் அதிமுகவை விமர்சிக்க கூடாது என தலைமைக் கழகத்திலிருந்து வாட்ஸ் அப் மூலமாக அவசரமான உத்தரவும் பறந்தது. எடப்பாடி பழனிசாமி பேட்டி கொடுத்த சில நிமிடங்களிலேயே அவரது வலதுகரமான ஆத்தூர் இளங்கோவன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தம்பி சுதீஷிடம் ஃபோன் பேசி இருக்கிறார்.
எடப்பாடி அளித்த பேட்டியின் பின்னணியைப் பற்றி விளக்கி, ’நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க. தேமுதிகவுக்கு என்ன செய்யணுமோ நிச்சயம் செய்வோம்’ என்று உறுதி அளித்துள்ளார். இந்த பின்னணியில்தான் அதிமுகவை விமர்சிக்க வேண்டாம் என பிரேமலதாவிடம் இருந்து அவசர உத்தரவு பறந்தது.
இதையும் படிங்க: எடப்பாடியாரின் கூட்டணிப்பேச்சு… 'இது தேவை இல்லாத விஷயம்..' அலட்சியப்படுத்திய அண்ணாமலை..!