×
 

வகுப்பறையில் மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் போக்சோவில் கைது...!

பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியரை இரண்டு பிரிவின் கீழ் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் இந்த நிலையில் கடந்த வாரம்  ஆசிரியர் சுந்தர வடிவேல் என்பவர் ஏழாம் வகுப்பு பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது இனத தொடர்ந்து பள்ளி மாணவர்களின் தங்களது பெற்றோர்களிடம் புகார் அளித்தார்கள்.


இது குறித்து நேற்று மாணவர்களின் பெற்றோர்கள்  பள்ளி வருகை புரிந்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து  திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர். தொடந்து பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது தலைமையிலான அதிகாரிகள்
விசாரணை மேற்கொண்டனர். 


பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் ஒழுங்கீனமாக ஆசிரியர் நடந்து கொண்டதாக  1098 தொலைபேசி அழைப்பில் புகார் வந்ததன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டனர்.
புகார் தெரிவித்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அனைவரிடமும் எழுத்து பூர்வமாக புகார்கள் பெறப்பட்டது.

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; காவலர் போக்சோவில் கைது!

இந்த நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த ஆசிரியர் சுந்தரவடிவேலை அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையிலிருந்து திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் ஆய்வாளர் ஜமுனா தலைமையிலானபோலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவ மாணவிகள் இடையே வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பாக இரண்டு பிரிவின் கீழ் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாஜக மாநில நிர்வாகி போக்சோவில் கைது! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share