லண்டனை அதிரவிட்ட தமிழன் இளையராஜா..! அரங்கேறியது ‘வேலியன்ட்’ சிம்ஃபோனி
இசையமைப்பாளர் இளையராஜா, ஆசிய திரைப்பட இசையமைப்பாளர்களில் முதன் முதலாக மேற்கத்திய செம்மையிசை சிம்ஃபோனியை வழங்கியவர்.
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, ஆசிய திரைப்பட இசையமைப்பாளர்களில் முதன் முதலாக மேற்கத்திய செம்மையிசை சிம்ஃபோனியை வழங்கியவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆவார்.
அவரது "வேலியன்ட்" சிம்ஃபோனி, மார்ச் 9, 2025 அன்று லண்டனின் எவென்டிம் அப்போலோ தியேட்டரில் முதன்முறையாக அரங்கேறியது. ராயல் ஃபில்ஹார்மோனிக் கான்சர்ட் ஆர்கெஸ்ட்ராவால் நிகழ்த்தப்பட்ட இந்த 45 நிமிட நிகழ்ச்சியை மைக்கல் டாம்ஸ் நடத்தினார். "இது உண்மையிலேயே ஒரு புலன்களுக்கு அப்பாற்பட்ட அனுபவம்," என்று லண்டனைச் சேர்ந்த பியானிஸ்ட் அனிருத் கிருஷ்ணா, இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.
நான்கு பிரிவுகளைக் கொண்ட சிம்ஃபோனியில், முதல் இரண்டு பிரிவுகள் மேற்கத்திய செம்மையிசையை மட்டுமே கொண்டிருந்தன. மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவுகளில் இந்திய செம்மையிசையின் தாக்கமும் இணைந்திருந்தது. இசை நுணுக்கங்களை ரசித்த கிருஷ்ணா, இசையமைப்பின் புதுமையான விஷயங்களை பாராட்டினார். நிகழ்ச்சியை பதிவு செய்ய தடை இருந்தபோதிலும், இணையத்தில் நிகழ்ச்சியின் வீடியோக்கள் பரவின.
இதையும் படிங்க: இளையராஜா இந்தியாவுக்கே பெருமை... புகழாரம் சூட்டும் பாமக தலைவர் அன்புமணி..!
லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரியும் சில்வியன் பேட்ரிக் ஜெசுதாஸ், இதன் தொனி மாற்றங்களை பகுப்பாய்வு செய்ய பல ஆண்டுகள் ஆகலாம் என்றார். "மூன்றாவது பிரிவை மீண்டும் இசைக்க வேண்டும் என்று வயலின் கலைஞர் கேட்டார்.அது இசையின் சிறப்புக்கு சான்று," என்று அவர் X-இல் பதிவிட்டார்.
"வேலியன்ட்" திரைப்பட இசையைத் தவிர்த்தாலும், இரண்டாம் பகுதியில் "பூவே செம்பூவே", "கண்ணே கலைமானே" போன்ற பாடல்களும், குரு படத்தின்பின்னணி இசையும் ரசிகர்களை மகிழ்வித்தன.
"பூவே செம்பூவே" கேட்டு கண்ணீர் விட்ட ஜெசுதாஸ், இளையராஜா "இதயம் போகுதே" பாடியதை சிறப்பு தருணமாகக் குறிப்பிட்டார். இந்திய ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். "நம் நாட்டு இசையமைப்பாளரின் சிம்ஃபோனியை நேரடியாகக் கேட்பது பெருமை," என்றார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிருஷ்ணா. 1998-இல் வெளியான "பூவே செம்பூவே" பாடலின் ஆர்கெஸ்ட்ரா வடிவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜாவின் படைப்பாற்றல் எல்லைகளைக் கடந்து கொடி கட்டி பறக்கிறது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: இளையராஜாவுக்கு இசை ஞானியைவிட மெய் ஞானியே பொருத்தம்.. நேரில் சந்தித்து வியந்த திருமாவளவன்.!