×
 

யார் இந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன்..? அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட இந்திய மாணவி..! என்ன காரணம்..?

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்த இந்திய மாணவி அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்த இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசனின் விசாவை அமெரிக்க உள்துறை ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவராகவே அமெரிக்காவை விட்டு வெளியேறினார் என்பது உறுதியாகியுள்ளது.

கடந்த 5ம் தேதி ரஞ்சனி ஸ்ரீனிவாசனின் விசாவை அமெரிக்க உள்துறை ரத்து செய்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் தங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சிபிபி ஹோம் ஆப் (CBPHomeApp) மூலம் தன்னை பதிவு செய்து, தானாகவே கடந்த 11ம் தேதி அமெரிக்காவை விட்டு ரஞ்சனி வெளியேறினார்.

இதையும் படிங்க: இந்திய வம்சாவளி மாணவி திடீர் மாயம்.. டூருக்கு சென்ற போது நேர்ந்த சோகம்.. கடற்கரையில் கடத்தப்பட்டாரா..?

என்ன காரணம்?

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர மேம்பாட்டுப் பிரிவில் முனைவர் பட்டப்படிப்பு படித்துவரும் ரஞ்சனி ஸ்ரீனிவாசன், ஹமாஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டார், பல்வேறு நடவடிக்கைகளியும் ஈடுபட்டிருந்தது அமெரிக்க அரசு கண்டுபிடித்தது. ஆனால் என்ன நடவடிக்கையில் ரஞ்சனி ஈடுபட்டார் என்பதை அமெரிக்க அரசு தெரிவிக்கவில்லை. 

இதையடுத்து, அமெரிக்க உள்துறை அமைச்சகம் ரஞ்சனிக்கு வழங்கியிருந்த மாணவர்களுக்கான எப்-1 விசாவை ரத்து செய்தது. இதை உள்துறை அமைச்சக அமைச்சர் கிறிஸ்டி நியோம்  உறுதி செய்தார். அவர் கூறுகையில் “அமெரிக்காவில் தங்கவும், கல்வி கற்கவும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகையாக விசா வழங்கப்படுகிறது. ஆனால் நீங்கள் தீவிரவாதத்துக்கும் வன்முறைக்கும் ஆதரவாக இருந்தால், இந்த சிறப்புச் சலுகை ரத்து செய்யப்படும். இந்த தேசத்திலும் இருக்கக்கூடாது. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவரி ஒருவர் சிபிபி செயலி மூலம் தானாகவே அமெரிக்காவைவிட்டு வெளியேறுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

யார் இந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன்?

இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன் அகமதாபாத்தில் உள்ள சிஇபிடி பல்கலைக்கழக்தில் இளநிலை டிசைன் படித்தவர். அதன்பின் அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில முதுநிலை டிசைன் படிப்பும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை, திட்டமிடல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவில் எம்பில் படிப்பும், நகர மேம்பாட்டு பிரிவில் முனைவர் பட்டத்துக்காகவும் படித்துவந்தார்.  

சிபிபி செயலி!

அமெரிக்க உள்துறை அமைச்சகம் கடந்த 10ம் தேதிதான் சிபிபி செயலியை அறிமுகம் செய்தது. இதன்படி சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போர் தாங்களாகவே முன்வந்து இந்த செயலியில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறலாம், நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான விருப்பத்தையும் தெரிவிக்கலாம். தாங்களாகவே வெளியேறும் வாய்ப்பைத் தேர்வு செய்து வெளியேறும் பட்சத்தில் எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாக விசா கிடைக்கவும் வாய்ப்புள்ளது, அமெரிக்காவில் வசிக்கவும் முடியும். தாங்களாகவே வெளியேறாவிட்டால், அமெரிக்க அதிகாரிகளால் கண்டறியப்பட்டால், ஒருபோதும் அமெரிக்காவுக்குள் வர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியைச் சேர்ந்த மாணவரி லீக்கா கோர்டியாவை குடியேற்ற அதிகாரிகள் கைது செய்தனர். சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தார். பாலிஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கைதாகிய 2வது நபர் லீக்கா ஆவார். சமீபத்தில் முகமது கலீல் என்பவர் மாணவர்களை போராட்டம் நடத்த ஒன்று திரட்டினார் என்பதற்காக அவரை நாடு கடத்த அமெரிக்கா முடிவு செய்தது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் சென்றாலும் இப்படியா? கணவருடன் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு 7 மாதம் ஜெயில்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share