எடப்பாடி தலையில் இடியை இறக்கிய விஜய்... ஒரே ஒரு கன்டிஷனில் அதிமுக ஆட்டம் குளோஸ்...!
அதிமுக கூட்டணியில் 80 தொகுதிகள் விஜய்க்கு துணை முதல்வர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாகவும் விஜய்தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கினார் கட்சியின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர், அந்த மாநாட்டிலேயே தந்தை பெரியார், அண்ணன், அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர், வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களை தங்கள் கட்சியின் கொள்கை தலைவராக அறிவித்தார். விஜய் கொள்கை அளவில் கூட திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் பிரித்துப் பார்க்கப் போவதில்லை இரண்டும் தமிழ்நாட்டுக்கான கொள்கைதான் என தடாலடியாக அறிவித்தார்.
மேலும் பேசிய விஜய் தனித்துபெரும்பான்மை பெறுவதுதான் நம் இலக்கு, ஆனாலும் நம்மோடு கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிப்போம் எனவும் தெரிவித்திருந்தார். அதற்கு முன்பாக விசிகவின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆட்சியில் பங்கு உள்ளிட்ட விஷயங்களை மிக வீரியமாக பேசி வந்த நிலையில் விசிகவை குறிவைத்து தான் விஜய் மாநாட்டில் அப்படி பேசினார் என அது பேசுபொருளானது. தொடர்ந்து விஜயின் தவெக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. திமுகவை மிகக் கடுமையாக விமர்சிக்கும் விஜய் அதிமுகவை விமர்சிக்காமல் மென்போக்கை கடைபிடித்து வருவது அதற்காகத்தான் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் மூன்று பள்ளி 'சார்'கள் சிறுமிக்கு செய்த அட்டூழியம்... ஸ்டாலின் அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு.!
அதிமுக கூட்டணியில் 80 தொகுதிகள் விஜய்க்கு துணை முதல்வர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிமுகவுடன் கூட்டணி இல்லை, பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கமளித்தார். ஆனால் தற்போது அதிமுகவுடன் மீண்டும் தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பதாகவும், ஆனால் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்கிற எண்ணத்தில் தான் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.
ஆனால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மத்தியிலோ, தவெக திமுக, அதிமுகவிற்கு மாற்றாக உருவாக்கப்பட்டு, மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. எக்காரணம் கொண்டு இரண்டு கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. தமிழகத்தில் முதன்மையான கட்சியாக தவெகவை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார் என்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் ஆளுங்கட்சியாக வரவேண்டும், தலைவர் தளபதி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் என்பது தான் தொண்டர்களின் விருப்பமாம். அதையே தான் தமிழ்நாட்டு மக்களும் விரும்புவதாக தவெகவினர் கூறுகின்றனர். மாநாட்டில் விஜய் கூறியது போல் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பிற கட்சிகளுக்கு பங்கு தரும் அளவிற்கு தவெகவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், உறுதியுடன் வியூகங்களை அமைத்து பணியாற்றி வருவதாக கூறுகின்றனர்.
ஒருபொழுதும் அதிமுகவோடு நாங்கள் கூட்டணி வைக்க வாய்ப்பே கிடையாது. நாங்கள் மாற்றத்தை உருவாக்கக் கூடியவர்கள் மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுத்து வருகின்றோம் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து வருகின்றோம். அதிமுக திமுகவிற்கு மாற்றாக மக்கள் சக்தியாக விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை மாற்றுவார் என அவரது கட்சியினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: திமுகன்னா ரெண்டு கொம்பு முளைச்சிருக்கா..? கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலின் அரசை வசைபாடும் எடப்பாடி பழனிச்சாமி.!